திரையில் 30 ஆண்டு விஜய்யிசம்.. இன்னும் 100 நாட்களில் கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் விஜய் ரசிகர்களின் பேவரிட்டாக சர்வதேச அளவில் காணப்படுகிறார். விஜய்க்காகவே அவரது படங்கள் வெற்றிகரமாக ஓடி வரும் சூழல்களும் சினிமாவில் காணப்படுகின்றன.

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜய். ரசிகர்களால் இவர் கொண்டாடப்படுகிறார்.

இந்நிலையில் இவர் நாயகனாக நடிக்கவந்து தற்போது 30 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இதற்கு இன்னும் 100 நாட்களே உள்ளன.

நடிகர் விஜய்

நடிகர் விஜய் ரசிகர்களின் பேவரிட்டாக எப்போதும் காணப்படுகிறார். சிறு வயதிலிருந்தே தனது தந்தையின் சில படங்களில் நடிக்கத் துவங்கியவர் விஜய். கடந்த 1992ல் இவர் நாயகனாக நடித்து நாளைய தீர்ப்பு படம் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படத்தை இயக்கியிருந்தார் இவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர். ஜோடியாகியிருந்தார் கீர்த்தனா.

நெகட்டிவ் விமர்சனங்கள்

நெகட்டிவ் விமர்சனங்கள்

இந்நிலையில் இந்தப் படத்தில் இவர் வாங்கிய நெகட்டிவ் கமெண்ட்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. இந்த முகத்தை வைத்துக் கொண்டு நடிக்க வந்துவிட்டார் என்றெல்லாம் இவர்குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதனால் மனமொடிந்துவிடவிலலை விஜய். இந்த சோதனைகளை தன்னுடைய சாதனைகளால் கடந்தார்.

காமெடி ரூட்

காமெடி ரூட்

இந்தப் படத்தை தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய ரூட்டை காமெடிக்கு மாற்றிய பின்பே இவருக்கு படங்கள் கைக்கொடுக்க ஆரம்பித்தன. இவருக்கு முதலில் வெற்றிமுகத்தை காட்டிய படங்கள் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்றவை.

வெற்றிப் படிக்கட்டுகள்

வெற்றிப் படிக்கட்டுகள்

தொடர்ந்து மின்சார கண்ணா படத்திலிருந்து காமெடி களத்திலும் கலக்கிய விஜய்க்கு அடுத்தடுத்து வெற்றிப் படிக்கட்டுகளே காத்திருந்தன. இந்நிலையில் இவரது நடிப்பு தற்காலங்களில் மிகவும் பக்குவப்பட்டுள்ளது. தொடர்ந்து சமூக அக்கறையையும் காட்டி இவரது படங்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படங்களில் வெற்றியும் இணைந்தே காணப்படுகின்றன.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வெற்றியை, வசூலை குவிக்கத் தவறவில்லை. இந்தப் படத்தில் லாஜிக் மீறல்களும் சுட்டிக் காட்டப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டன. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த நெல்சன் இந்தப் படத்தில் சொதப்பலையே விஜய்க்கு பரிசளித்திருந்தார்.

வாரிசு படத்தில் விஜய்

வாரிசு படத்தில் விஜய்

தொடர்ந்து தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படம் அவருக்கு 66வது படமாக அமைந்துள்ளது. குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற சிறப்பான ஸ்கிரிப்ரில் தான் நடித்து வருவதாக விஜய் பாராட்டு தெரிவித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் 30 ஆண்டு கேரியர்

விஜய்யின் 30 ஆண்டு கேரியர்

கடந்த ஜூன் மாதத்தில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இந்தப் படத்தின் டைட்டில், போஸ்டர் போன்றவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் விஜய்யின் அடுத்தக் கொண்டாட்டத்திற்கு தற்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். விஜய் கோலிவுட்டில் நாயகனாக நடிக்கவந்து 30 ஆண்டுகள் நிறைவே அது.

இன்னும் 100 நாட்கள்

இன்னும் 100 நாட்கள்

கடந்த 1992ல் நாளைய தீர்ப்பு டிசம்பர் 4ம் தேதி வெளியானது. இந்நிலையில் விஜய் நாயகனாக நடிக்கத் துவங்கி 30 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் 100 நாட்களே உள்ளன. இதையொட்டி தற்போதே அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். ஸ்பெஷல் போஸ்டர் டிசைனையும் பதிவிட்டு வருகின்றனர்.

தெறிக்க காத்திருக்கும் ட்விட்டர்

தெறிக்க காத்திருக்கும் ட்விட்டர்

டிசம்பர் 4ம் தேதி மீண்டும் ட்விட்டர் தெறிக்கும் என்பது தற்போதே தெரிய துவங்கியுள்ளது. விஜய் படத்தின் அப்டேட்கள், அவரது பல போஸ்டர்கள், வீடியோக்கள், காமன் டிபிக்கள் என்று ட்விட்டர் களைகட்டும். ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளையே திருவிழாவாக்கும் நிலையில், 30 ஆண்டு கொண்டாட்டத்தை கண்டிப்பாக தெறிக்க விடுவார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.