பிடிஆர் மீது தாக்குதல்: அண்ணாமலை போட்ட திட்டமா? லீக்கான ஆடியோவால் அதிர்ச்சி!

மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜக நிர்வாகி செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். ஆனால் இதன் பின்னணியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இருக்கலாம் என அப்போதே யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்பு அண்ணாமலை மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரனுடன் பேசியதாக ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் பேசும் நபர் (அண்ணாமலை?), “எத்தனை பேர் இருக்கிறார்கள், அனைவரையும் வரச் சொல்லுங்கள், ரொம்ப மாஸாக செய்ய வேண்டும், வேற மாதிரி பண்ண வேண்டும், இதை எப்படி அரசியல் செய்வது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறுகிறார். இந்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக அரசின் கொள்கைகளை, மாநில அரசுகளை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை மிக நுட்பமாக கேள்வி எழுப்பி வருபவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அவரது பேச்சு தமிழ்நாடு கடந்து பல மாநிலங்களில் விவாதத்தை எழுப்புகிறது. ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள் பிடிஆரின் பேச்சுக்களை வாதங்களாக முன்வைத்து வருகின்றனர்.

மோடி தலைமையில் பாஜக அரசு ஆட்சியமைத்ததிலிருந்து முன்னெடுக்கப்பட்ட திட்டங்களால் ஏற்பட்ட இழப்புகள், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பிடிஆர் தேசிய ஊடகங்களில் பேசுகிறார்.

இவையெல்லாம் பாஜகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதனாலே அவர் மற்ற தமிழக அமைச்சர்களைவிட பாஜகவினரால் அதிகமாக விமர்சிக்கப்படுகிறார். இதன் நீட்சியாக மதுரையில் அவரை அசிங்கப்படுத்துவதற்காக செருப்பு வீச்சு சம்பவத்தை பாஜகவினர் அரங்கேற்றினர்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் வன்முறையில், விருப்பத்தகாத செயல்களில் இறங்குவதை பாஜக கைவிட வேண்டும் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துவருகின்றன. இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக அண்ணாமலை பேசியதாக வெளியாகியுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.