இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கடந்த வௌ்ளிக்கிழமை (26) யாழ்.குடா நாட்டிற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, 55 வது படைப்பிரிவின் 551 வது பிரிகேட் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 16 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் யாழ். பூலோலி பிரதேசத்தில் வசிக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் எல்டிடி குடும்ப உறுப்பினருக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு இராணுவத் தளபதியினால் கையளிக்கப்பட்டது.
Directorate of Media,
Army Headquarters,
Colombo.