ரசிகர்மன்ற செயலாளர் மனைவியை அயர்லாந்துக்கு அனுப்பிவைத்த சூர்யா: தொழிலும் ரொம்ப முக்கியம் என அட்வைஸ்

சென்னை: சூர்யா படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் பல சமூகநலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் தொடங்கிய அகரம் அறக்கட்டளை மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து பலரின் கல்விக்காக உதவிவரும் சூர்யா, இன்னொரு தரமான சம்பவத்தையும் செய்துள்ளார்.

முன்னணியில் இருக்கும் சூர்யா

நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமான சூர்யா மீது, ஆரம்பத்தில் நடிப்பில் சுமார் என்றே விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா படத்துக்குப் பின்னர் எல்லாமே தலைகீழாக மாறின. காக்க காக்க, பிதாமகன், வாரணம் ஆயிரம் என வரிசைக் கட்டி டாப் கியரில் பயணித்தார் சூர்யா. அவரது விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் தான் இன்று தேசிய விருது பெற காரணம் என, சூர்யாவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் தான் பலம்

ரசிகர்கள் தான் பலம்

சூர்யாவின் நடிப்பும் திறமையும் சரியாக அடையாளம் காணப்படும் வரையிலும், அவரை தளர்ந்துவிடாமல் பாதுகாத்தவர்கள் ரசிகர்கள் தான். ஆரம்பம் முதலே சூர்யாவின் நடிப்பை கொண்டாடித் தீர்த்த அவரது ரசிகர்கள், வெற்றி, தோல்வி என எல்லா காலங்களிலும் அவருடன் உறுதியாக நின்றனர். ரசிகர்களின் பலத்தை உணர்ந்த சூர்யா, அவர்களின் நலனையும் தனது நலனாகவே பார்த்தார்.

ரசிகர்கள் துணையுடன் அகரம்

ரசிகர்கள் துணையுடன் அகரம்

திரைப்படங்களில் நடிப்பதும், நல்ல படங்களை தயாரிப்பதும் மட்டும் போதாது என கருதிய சூர்யா, ஏழை மாணவர்களின் நலனுக்காக ‘அகரம் அறக்கட்டளை’ தொடங்கினார். பொருளாதாரத்தில் வசதி குறைந்த மாணவ, மாணவிகளின் கல்வி கனவை நனவாக்கியது, சூர்யாவின் அகரம் அறக்கட்டளை. சூர்யாவின் இந்த முயற்சிக்கு பெரிய துணையாக இருந்தது அவரது ரசிகர்களே. இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யாவுடன் அவரது ரசிகர்கள் பயணித்துள்ளனர்.

அயர்லாந்துக்கு அனுப்பி வைத்த சூர்யா

அயர்லாந்துக்கு அனுப்பி வைத்த சூர்யா

இந்த நிலையில், தனது ரசிகர்மன்ற செயலாளரின் மனைவியின் கல்வி கனவையும் நனவாக்கியுள்ளார் சூர்யா. மதுரை மாவட்ட ரசிகர்மன்ற செயலாளர் மனோஜ் என்பவரின் மனைவி தீபிகா, மேற்படிப்பு படிக்க ஆர்வமாக இருந்துள்ளார். இதனையறிந்துகொண்ட சூர்யா, அவரை அயர்லாந்து நாட்டுக்கு அனுப்பி படிக்க உதவி செய்துள்ளார். அதுமட்டும் இல்லாமல், அவரை வழியனுப்ப ஏர்போர்ட் செல்ல முடியாததால், செல்போனில் அழைத்து வாழ்த்தியுள்ளார் சூர்யா.

சூர்யாவால் நெகிழ்ந்த தீபிகா

சூர்யாவால் நெகிழ்ந்த தீபிகா

படப்பிடிப்பு காரணமாக சூர்யா நேரில் வரமுடியாமல் செல்போனில் அழைத்து வாழ்த்தியதும் தீபிகா ரொம்பவே நெகிழ்ந்துபோனார். நடிகர் சூர்யா தீபிகாவை செல்போனில் வாழ்த்திய ஆடியோ வைரலாகி வருகிறது. அதில், “நல்லா இருக்கீங்களா மா என கேட்கும் சூர்யா, மேற்படிப்புக்காக நீங்க அயர்லாந்துக்கு போறது ரொம்பவே சந்தோஷம். அதுவும் உங்க குடும்பத்துல உள்ளவங்க சப்போர்ட் பண்றது மகிழ்ச்சியா இருக்கு. தொழிலும் முக்கியம் அதைவிட படிப்பில் அதிக கவனம் செலுத்துங்க” என அன்போடு பேசுகிறார் சூர்யா. இதனால் நெகிழ்ந்துப் போன தீபிகா, சூர்யாவுக்கு உருக்கமாக நன்றி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.