சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்த 2 வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். குற்றவியல் நடைமுறைப்படி தனிநீதிபதி முன்புதான் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதம் வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த வாதங்களுக்காக ஆக.30 க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
