விண்ணை முட்டும் விலைவாசி.. வெறுப்பின் உச்சத்தில் மக்கள்..?!

ஐரோப்பிய யூனியனில் இருந்து தனியாகப் பிரிட்டன் பிரிந்த நாளில் இருந்து மோசமான வர்த்தகத்தை, பொருளாதாரச் சரிவையும் எதிர்கொண்டு இருக்கும் வேளையில், பிரிட்டன் நாட்டின் அரசியலிலும் பெரும் பிரச்சனை வெடித்துள்ளது.

போரிஸ் ஜான்சான் உட்படப் பல முக்கியத் துறைகளின் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்குப் பிரிட்டன் அரசு வட்டாரங்கள் விடை தேடி அலைந்து வருகிறது. இதற்கிடையில் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி இன்று தங்களது வீட்டில் கோ பூஜை செய்துள்ளார்.

இந்த நிலையில் பிரிட்டன் மக்கள் மோசமான நிலையை எதிர்கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட உள்ளனர்.

பலத்த வேலையிழப்பினை சந்தித்து வரும் UK.. போரிஸ் ஜான்சனுக்கு காத்திருக்கும் சவால்கள்..!

எனர்ஜி செலவுகள்

எனர்ஜி செலவுகள்

எரிபொருள் விலை, உணவுப் பொருட்கள் விலை, உற்பத்தி பொருட்களின் விலை என அனைத்தும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும் வேளையில் பிரிட்டன் நாட்டில் எனர்ஜி-க்கான செலவுகள் அதாவது எரிவாயு, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கான செலவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து சுமார் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

பிரிட்டன் நாட்டு மக்கள்

பிரிட்டன் நாட்டு மக்கள்

இதனால் பிரிட்டன் நாட்டு மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், மக்களின் துயரத்தைப் பார்த்து தனியார் நிறுவனங்கள் தானாக முன்வந்து ஊழியர்களுக்கு எனர்ஜி-க்கான செலவுகளை ஈடு செய்யவே நிதியுதவி செய்தனர். பல நிறுவனத்தில் ஊழியர்கள் போராட்டத்தின் வாயிலாகவும் பெற்றதும் நடந்தது.

புதிய விலை நிலவரம்
 

புதிய விலை நிலவரம்

வெள்ளிக்கிழமை பிரிட்டன் நாட்டின் எனர்ஜி கட்டுப்பாட்டு ஆணையம் தனது புதிய விலை நிலவரத்தை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பில் ஒரு எனர்ஜி யூனிட்-க்கு வாடிக்கையாளர் செலுத்தும் அதிகப்படியான அளவீட்டைத் தொட்டு உள்ளது.

 3.34 லட்சம் ரூபாய்

3.34 லட்சம் ரூபாய்

அதாவது பிரிட்டன் நாட்டு மக்கள் HEATING மற்றும் மின்சாரத்திற்கு ஒரு வருடத்திற்குச் சுமார் 3549 பவுண்ட் அதாவது 3.34 லட்சம் ரூபாய் அளவிலான தொகையைச் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதில் HEATING என்பது பிரிட்டன் மக்கள் வீட்டில் குளிர்காலத்தில் வீட்டில் வெப்ப நிலையைச் சமன் செய்ய ஆயில் அல்லது எரிவாயு மூலம் ஹீட்டிங் செய்யப்படும். அதற்கான செலவும் இதில் அடங்கும்.

40 வருட உச்ச பணவீக்கம்

40 வருட உச்ச பணவீக்கம்

பிரிட்டன் மக்கள் ஏற்கனவே 40 வருடத்தில் பார்க்காத பணவீக்க அளவான 10.1 சதவீத அளவீட்டை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இந்த எனர்ஜி கட்டண உயர்வு, அந்நாட்டின் நடுத்தர மற்றும் ஏழை மக்களைக் கடுமையாகப் பாதித்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்படும் நிலை உருவாக்கியுள்ளது.

 எரிசக்தி தேவை

எரிசக்தி தேவை

உலகளவில் பொருளாதாரங்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மீண்டு வந்த நிலையில் வர்த்தகம், உற்பத்தி அதிகரிக்க எரிசக்திக்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன.

உக்ரைன் ரஷ்யா

உக்ரைன் ரஷ்யா

உக்ரைனில் ரஷ்யாவின் போர் வாயிலாக ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையிலும் எரிசக்தி நெருக்கடியை உருவாகியுள்ளது. ரஷ்யா தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளையைப் பெரிய அளவில் குறைத்தும், அவ்வப்போதும் துண்டித்ததுள்ளது.

ஐரோப்பா மற்றும் பிரிட்டன்

ஐரோப்பா மற்றும் பிரிட்டன்

சுருங்கி வரும் விநியோகம், அதிகப்படியான தேவை மற்றும் எந்த நேரத்திலும் ரஷ்ய எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் அச்சம் ஒட்டுமொத்த ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு உள்ளது. இந்த நிலை தான் பணவீக்கத்தை உயர்த்தியும், எனர்ஜி விலையையும் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UK energy bills are skyrocketing; Poverty may rise amid energy bill 80 percent hiked

UK energy bills are skyrocketing; Poverty may rise amid energy bill 80 percent hiked | விண்ணை முட்டும் விலைவாசி.. வெறுப்பின் உச்சத்தில் மக்கள்..?!

Story first published: Friday, August 26, 2022, 16:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.