வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் ரிஷி சுனாக்கம், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் லண்டனில் பசு மாட்டுக்கு ‘கோ பூஜை’ செய்தனர்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் ,வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
![]() |
இந்த நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ரிஷி சுனாக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் லண்டனில் பக்திவேதாந்தா மனோர் கோவிலில் ‘கோ பூஜை’ செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பூஜையின் போது பசு மாட்டிற்கு ஆரத்தி காண்பித்து குங்குமம் வைத்து ரிஷி சுனக்கும், அக்ஷதா மூர்த்தியும் வழிபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement