இ.சி.ஆர் பங்களா… சுற்றிக் காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா: விலை எவ்ளோ தெரியுமா?

விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.

ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இதில் ஜீவாவின் மனைவியாக மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.

இதில் ஆரம்பத்தில் மீனாவை நெகட்டிவாக காட்டினர். ஆனால் போகபோக மீனாவின் கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

ஹேமா, Hema’s  diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த  ஈசிஆர் பங்களா டூர் வீடியோ இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீடியோவில் பேசும் ஹேமா, நம்ம ஃபேமில ஒரு சின்ன செலிபிரேஷன் நடக்க போகுது. எப்போவுமே நம்ம குடும்பத்துல ஏதாவது செலிபிரேஷனா, பக்கத்துல இருக்கிற எல்லாருமே ஒன்னா கூடிடுவோம். ஆனா, வீட்டுல இருந்தா ஒருநாள் தான் கொண்டாட முடியும். அதுவே வெளியே கொஞ்சம் தூரமா போனா, எவ்வளவு நாள் போறோமோ, அவ்வளவு நாளும் கொண்டாட்டம் தான். இப்போ நாங்க ஈசிஆர் பங்களாவுக்கு போயி செலிபிரேட் பண்ண போறோம்னு சொல்லி, ஈசிஆர் பங்களாவுக்கு போகிறார்.

பங்களாவுக்கு சென்று இறங்கிய உடனேயே ஹேமா, இப்போ நாம ஈசிஆர் பங்களாவுக்கு வந்தாச்சு, நீங்க உள்ளே வந்தவுடனே இங்கே பெரிய சிட்-அவுட் ஏரியா இருக்கு. இங்க ஒரு ஃபேமிலியே ஜாலியா உட்கார்ந்து சில் பண்ணலாம். சிட்-அவுட் எதிர்லயே  ஸ்வீமிங்ஃபூல் இருக்குதுனு சொல்லி வீட்டுக்குள் சென்று காண்பிக்கிறார்.

இது 3 பெட்ரூட் வீடு. உள்ள வந்தவுடனே பெரிய ஹால் இருக்கு. பக்கத்துலேயே மினி கிச்சன், மினி ஃபிரிட்ஜ் இருக்கு. நம்ம எத்தனை நாளைக்கு வாரோமோ, அத்தனை நாளைக்குள்ள பொருட்களை இங்க ஸ்டோர் பண்ணிக்கலாம். கீழே ஒரு பெட்ரூம், டைனிங் ஏரியா இருக்குது என்று சொல்லி, மேலே உள்ள போர்ஷனுக்கு ஹேமா செல்கிறார். இங்க 2 ரூம் இருக்கு. இங்கதான் நாங்க தங்கியிருக்கோம். இன்னொரு ரூம்ல என் வீட்டுக்காரர் ஓட தங்கச்சி இருக்காங்க. வெளியே ஒரு பெரிய பால்கனி இருக்கு.

இந்த வீட்டுல இருந்து 10 கிமீட்டர்ல மகாபலிபுரம், 1 கிமீட்டர்ல பீச் இருக்குது. இதுதான் நம்மளோட ஈசிஆர் பங்களா. இது மொத்தமா 2 ½ கிரவுண்ட். இதோட விலை 30 ஆயிரம் ரூபாய் தான். என்னடா! 2 ½ கிரவுண்ட், 3 பெட்ரூம் வீடு 30 ஆயிரம் ரூபாய் நினைக்காதீங்க. இது நம்ம வீடு இல்ல. இது ஒரு ரிசார்ட் என்று சிரிப்பு பொங்க சொல்கிறார் ஹேமா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.