உக்ரைனில் இருந்து 1மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதி.
ஒவ்வொரு மாதமும் $1 பில்லியன் வரை லாபம் என மதிப்பீடு.
தானிய ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து, உக்ரைன் 1 மில்லியன் டன் தானியங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அந்தநாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் பிப்ரவரி 24ல் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் தேங்கியுள்ள பல மில்லியன் டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதனால் உலகளவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை, துருக்கி, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகியவற்றிக்கு இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உணவுத் தானிய ஏற்றுமதி தொடங்கப்பட்டது.
இந்தநிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து, 1 மில்லியன் டன் தானியங்களை உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தானிய ஏற்றுமதி மூலம் மட்டும் நாடு ஒவ்வொரு மாதமும் $1 பில்லியன் வரை சம்பாதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
EPA
இதுத் தொடர்பாக துருக்கியின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர், சமீபத்தில் தானிய ஒருங்கிணைப்பு மையம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய உணவு நெருக்கடி நேரத்தில் இவை தானியங்களின் விலை கணிசமாகக் குறைக்கும் என்று தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: வான்வழித் தாக்குதலில் 7 பேர் வரை மரணம்…எத்தியோப்பியாவில் தீவிரமடையும் சண்டை!
திங்களன்று உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து தானியங்கள் ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்கள் புறப்பட்டுள்ளன, அவை அடுத்து வரும் நாட்களில் இஸ்தான்புல்லுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.