கோப்ரா படத்தில் அஜித் ரெஃபெரன்சா?…இதை எப்படிடா கண்டுபிடிச்சீங்க?

சென்னை : இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய டைரக்டர் அஜய் ஞானமுத்து முதல் முறையாக விக்ரமுடன் இணைந்துள்ள படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ சுமார் 90 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி,இர்ஃபான் பதான், மிருணாளினி ரவி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரிலீசாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் கோப்ரா ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

விக்ரம் கிட்டத்தட்ட 20 கெட்அப்களில் நடித்துள்ள இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பெரிய அளவில் நடந்து வருகிறது. மதுரை, திருச்சி, சென்னை, கொச்சி ஆகிய நகரங்களைத் தொடர்ந்து பெங்களூருவில் நடக்கும் ப்ரொமோஷனில் விக்ரம் கலந்து கொள்ள உள்ளார்.

வரவேற்பை பெற்ற டிரைலர்

சமீபத்தில் கோப்ரா படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பல வித கெட்அப்களில் வரும் விக்ரமை அடையாளமே கண்டுபிடிக்க முடியவில்லை. நிஜமாகவே இவர் விக்ரம் தானா என நினைத்து ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த டிரைலர் யூட்யூப்பில் இதுவரை கிட்டத்தட்ட 9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

 கொந்தளித்த தெலுங்கு ரசிகர்கள்

கொந்தளித்த தெலுங்கு ரசிகர்கள்

இதற்கிடையில் கோப்ரா படத்தின் டிரைலர் தமிழில் தான் வெளியிடப்பட்டது. தெலுங்கிலோ அல்லது கன்னடத்திலோ இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழில் வெளியிட்ட டிரைலரில் ஒரு சப் டைட்டில் கூட போடவில்லை. அதனால் தமிழை தவிர மற்ற மொழிகளில் நிச்சயம் இந்த படம் ஃபிளாப் ஆகும் என ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த விக்ரம் ரசிகர்கள் கொந்தளித்தனர். இதனையடுத்து நேற்று மாலை கோப்ரா தெலுங்கு டிரைலர் வெளியிடப்பட்டது.

கோப்ராவில் அஜித் ரெஃபெரன்சா

கோப்ராவில் அஜித் ரெஃபெரன்சா

பட ரிலீசிற்கு இன்றும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கோப்ரா படத்தில் அஜித்தின் ரெஃபெரன்ஸ் உள்ளது என்ற தகவல் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. படமே இன்னும் ரிலீஸ் ஆகவில்லையே எப்படி சொல்கிறீர்கள் என கேட்டால், கோப்ரா டிரைலரில் உள்ளதாக காட்டுகிறார்கள். அந்த டிரைலரில், சிறிய துண்டு சீட்டுகள் பின் செய்யப்பட்டுள்ள இடத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடந்து வருவது போன்ற ஒரு சீன் இருக்கும். அந்த சீனில் ஒரு பேப்பரில், எனக்கு அஜித்தை பார்க்க வேண்டும் – சேது என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதை எப்படிடா கண்டுபிடிச்சீங்க

இதை எப்படிடா கண்டுபிடிச்சீங்க

இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், அஜித் பெயர் இருந்தால் அஜித் ரெஃபெரன்சா? இது கந்தசாமி பட ரெஃபெரன்ஸ்ப்பா. கந்தசாமி பட சீனை உருவி இதில் சேர்த்துள்ளார்கள். ஹாலிவுட் ரேஞ்சில் டக்குடக்கென அமைக்கப்பட்ட டிரைலர் ஷாட்களில் இதை எப்படிடா கண்டுபிடிச்சீங்க? ஒருவேளை கோப்ரா டிரைலரை ஸ்லோ மோஷனில் பார்த்திருப்பானுங்களோ என செமையாக கலாய்த்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.