சீனா-வின் பெல்ட் & ரோடு திட்டத்தின் நிலை என்ன.. சொந்த காசில் சூனியமா..?

சீனா அரசின் வியக்கவைக்கும் பெல்ட் & ரோடு முயற்சி (பிஆர்ஐ) தொடங்கி ஏறக்குறைய பத்து ஆண்டுகள் முழுமையாக முடிந்துள்ளது.

இந்த நிலையில் பெல்ட் & ரோடு முயற்சி திட்டம் குறித்து லண்டனைத் தளமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான Democracy Forum இந்த உலகளாவிய திட்டத்தின் ஆதாயங்கள் மற்றும் செலவுகள் குறித்து விவாதிக்க நிபுணர்கள் குழுவை ஆகஸ்ட் 25 விர்ச்சுவல் கருத்தரங்கிற்கு அழைத்தது.

இந்த முக்கியமான கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. கடைசியில் முன்வைக்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா..? ‘BRI அதன் பொலிவை இழந்துவிட்டதா..? என்பது தான்.

Essar Group: ரூ.19000 கோடி சொத்துக்கள் விற்பனை.. வாங்குவது யார் தெரியுமா..?

சீனா

சீனா

சீனா அரசின் பெல்ட் & ரோடு முயற்சி (பிஆர்ஐ) திட்டத்தின் மூலம் சையின்ஸ் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பிற நாடுகள் உடனான இணைப்பை மேம்படுத்தியுள்ளது. இதேபோல் வர்த்தகத்தை விரிவுபடுத்தியது மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைத் திறந்துவிட்டாலும், ‘கடன் பொறிகள்’ மற்றும் சுற்றுச்சூழல் அழிவு பெரும் பிரச்சனையாக உள்ளது.

பெல்ட் & ரோடு முயற்சி

பெல்ட் & ரோடு முயற்சி

சீனா அரசின் பெல்ட் & ரோடு முயற்சி திட்டம் மூலம் மேற்கத்திய நாடுகளின் தாக்கம் மற்றும் வர்த்தகம் இல்லாத நாடுகளைத் தனது வர்த்தகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மட்டும் அல்லாமல் அந்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது என ஹம்ப்ரி ஹாக்ஸ்லி தெரிவித்துள்ளார்.

பொற்காலம்
 

பொற்காலம்

பெல்ட் & ரோடு திட்டம் சீனாவின் பொற்காலத்தை உருவாக்கும் இலக்கின் அடித்தளமாக விளங்கியது எனக் கூறப்பட்டாலும், சீனா-வின் செயல்பாடுகள் பல நாடுகளை அதிகப்படியான கடன் வலையில் சிக்கவைத்துத் திவாலாக்கியது என்பது தான் உண்மை. இதுவரையில் இலங்கை, நிகரகுவா மற்றும் சாலமன் தீவுகள் போன்ற நாடுகள் சீனாவின் கடனால் பாதிக்கப்பட்டு உள்ளது.

10 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

இதேவேளையில் பெல்ட் & ரோடு திட்டம் துவங்கி 10 ஆண்டுகளுக்குப் பின் சீனா சர்வதேச நாடுகளில் செய்த முதலீடுகள் தற்போது வாராக் கடனாக மாறியுள்ளது. இது சீன பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் அதேவேளையில் சீனாவில் தற்போது ரியல் எஸ்டேட் முதல் பல துறையில் நிதி நெருக்கடி உருவாகியுள்ளது.

சிக்கல்

சிக்கல்

இதேபோல் சீனாவின் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது, அதனால் காலத் தாமதம் மட்டும் அல்லாமல் சீனா செயல்படுத்தும் திட்டங்கள் மூலம் லாபம் கிடைப்பது இல்லை. இதனால் உலகின் அடுத்தப் பெரும் கடன் பிரச்சனை சீனா மூலம் உருவாகும் என ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸ் தெரிவித்தார்.

ராணுவம்

ராணுவம்

இதேபோல் சீனா இந்தப் பெல்ட் & ரோடு திட்டம் மூலம் குறுகிய காலத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை, அனைத்தும் நீண்ட காலத் திட்டம் தான். இப்படியிருக்கையில் திவாலான நாடுகளில் முதலீடு செய்த தொகையை அப்படியே விட்டுவிடாது. கட்டாயம் பெல்ட் & ரோடு திட்டத்தின் முக்கியப் பகுதியாக இருக்கும் ராணுவ சக்தியை பயன்படுத்தித் தனது திட்டத்தையோ அல்லது நாட்டையோ கையகப்படுத்த முயற்சி செய்யும் என TDF சேர்மன் Barry Gardiner கூட்டத்தின் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is China’s Belt & Road Initiative lost its shine? Is debt trap is reversed..?

Is China’s Belt & Road Initiative lost its shine? Is debt trap is reversed..? சீனா-வின் பெல்ட் & ரோடு திட்டத்தின் நிலை என்ன.. சொந்த காசில் சூனியமா..?

Story first published: Saturday, August 27, 2022, 18:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.