தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சார்பில் தென் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி மதுரை பாத்திமா கல்லூரியில் நடைப்பெற்றது. இதில் மதுரை, சிவகாசி, தேனி, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 600 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஜிம்னாஸ்டிக் தலைவர் மூவேந்திரன், மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் நாகவடிவேல் பரிசினை வழங்கினார். ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்தில் முதல் இடத்தை மதுரை அணி வென்றது. அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஜிம்னாஸ்டிக் செயலாளர் வைரமணி பரிசினை வழங்கினார். இரண்டாம் இடத்தை வென்ற சிவகாசி மாவட்ட மாணவர்களுக்கு தேனி மாவட்ட தலைவர் சரவணகுமார் பரிசுகளை வழங்கினார். மூன்றாம் இடத்தை பிடித்த தேனி மாவட்ட வீரர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் பரிசினை வழங்கினார். இப்போட்டியை சிறப்பாக நடத்திக் கொடுத்த ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் கருணாகரன் மற்றும் பாட்ஷா, சோனா ஆகியோரை நிர்வாகிகள் பாராட்டினர்.

ஜிம்னாஸ்டிக் போட்டியில் மதுரை அணி சாம்பியன்
மதுரை
Related Tags :