புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு

சென்னை:
புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவி ஏற்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி முர்மு கடந்த 10-ஆம் தேதி பிறப்பித்தார்.

புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் இன்று பதவியேற்க இருக்கிறார். அவருக்கு குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். யுயு லலித்தின் பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே உள்ளது. வரும் நவம்பர் 8-ஆம் தேதி யுயு லலித் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து மீண்டும் புதிய தலைமை நீதிபதி தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.