எத்தியோப்பியாவில் வான் தாக்குதலில் 7 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல்
எத்தியோப்பியாவின் வடக்கு டைக்ரே பிராந்தியத்தின் தலைநகரில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
எத்தியோப்பியாவின் டிக்ரே மற்றும் அம்ஹாரா பிராந்தியங்களின் எல்லையில் தேசிய அரசாங்கத்திற்கும் திக்ராயன் படைகளுக்கும் இடையே சண்டை மூண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, மெக்கெல் மீது (Mekelle) இந்த விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மேலும் நான்கு மாத கால போர் நிறுத்தம் இந்த வாரம் சரிந்த பின்னர் நடைபெறும் முதல் தாக்குதல் இதுவாகும்.
Reuters
இந்த தாக்குதலில் 7 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், இறந்தவர்களில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுத் தொடர்பாக Ayder மருத்துவமனையின் தலைமை நிர்வாகி Kibrom Gebreselassie ட்விட்டரில், மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் இறந்துள்ளனர், மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் Legesse Tulu, பொதுமக்கள் உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் பொய் மற்றும் திட்டமிட்ட நாடகம் என்று தெரிவித்தார்.
AFP
கூடுதல் செய்திகளுக்கு: இலங்கை குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள்…தெற்காசிய நாடுகளுக்கு ஐ.நா எச்சரிக்கை
அத்துடன் அரசாங்கத் தாக்குதல்கள் சிவிலியன் வசதிகளைத் தாக்கியதை மறுத்த அவர், அவை இராணுவத் தளங்களை மட்டுமே குறிவைத்ததாக தெரிவித்துள்ளார்.