13 ஆண்டுகளுக்கு பிறகு…திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன விக்ரம் பட நடிகர்

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாள மொழி சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நரேன். தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் ஹீரோவானவர்.

பள்ளிக்கூடம், அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை, தம்பிக் கோட்டை, கோ, முகமூடி, ரம், கைதி ,சாம்பியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கைதி படத்தில் இன்ஸ்பெக்டர் ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சமீபத்தில் ரிலீசான விக்ரம் படத்திலும் போலீஸ் ரோலில் நடித்து பேச வைத்தார்.

நரேன், மஞ்சு என்ற டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளரை கோழிக்கோட்டில் 2007 ம் ஆண்டு ஆகஸ்ட் 26 ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2009 ம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்நிலையில் இன்று நரேன் – மஞ்சு தனது 15வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி உள்ளார். இந்நிலையில் தாங்கள் இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக உள்ளதாக நரேன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது மனைவி உடனான போட்டோவுடன், ஸ்கேன் ரிப்போர்ட்டையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

Actor Narain shares a good news on his 15th wedding anniversary

அதில் அவர், 15வது திருமண நாளில் எங்கள் குடும்பத்தில் புதிய நபர் விரைவில் வர உள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். அதோடு தனது மனைவி மற்றும் மகள் தன்மயாவுடன் இருக்கும் அழகிய குடும்ப போட்டோ ஒன்றையும் நரேன் பகிர்ந்துள்ளார்.

13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அப்பாவாக உள்ள நரேனுக்கு திருமண நாள் வாழ்த்துக்களுடன், இரண்டாவது முறையாக தந்தையாக போவதற்கும் சேர்த்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மலையாள படங்கள் பலவற்றிலும் நடிக்க கமிட்டாகி வரும் நரேன், விக்ரம் 3, கைதி 2 படங்களிலும் முக்கிய ரோல்களில் நிச்சயம் நடிப்பார் என சொல்லப்படுகிறது. மலையாளத்தில் மிக பிரபலமாக இருக்கும் நரேனுக்கு விக்ரம் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புக்கள் தமிழிலும் வந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.