28 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு: எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு?

Tamil Nadu News: அடுத்த மாதம் (செப்டம்பர் 1-ஆம் தேதி) முதல், தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன, அதில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனால், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களின் கட்டணத்திற்கு ஐந்து ரூபாய் உயர்வும், டிரக், பஸ், மற்றும் பல அச்சுகள் கொண்ட வாகனங்களின் கட்டணத்தில் நூற்றைம்பது ரூபாய் உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர், வேலஞ்செடியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர் பாண்டியபுரம், மதுரை, நாமக்கல் ராசம்பாளையம், சேலம் ஓமலூர், நத்தக்கரை, வைகுண்டம், வீரசோழபுரம், சேலம் மேட்டுப்பட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம், விஜயமங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி உட்பட 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.