அக்.17 காங்கிரஸ் தலைவர் தேர்தல், அக்.19 வாக்கு எண்ணிக்கை முடிவுகள்…! – காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு..!

அக்டோபர் 17ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில்
காங்கிரஸ்
செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக தகவல்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள், அக்டோபர் 19ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது .காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளதால் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இணையவழியில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை வகித்தார்.

இதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிக்கை வரும் செப்டம்பர் 22ல் வெளியாகும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24ல் தொடங்கும். செப்டம்பர் 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளகும். காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என்றும் அக்டோபர் 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது காங்கிரஸ் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.