ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை… அமைச்சர் சிவசங்கர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்து அதன் சிறப்பம்சங்களுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்களின் நலனுக்காக முக்கிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை அதிமுக காலத்தில் தொடங்கியது. தற்போது 7 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிலாளர்களின் சம்பள விகிதம் திருத்தி அமைக்கப்பட்டது. 5 சதவீதமாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டது என்று கூறினார்.

தமிழகத்தில் பல நெருக்கடிகள் இருந்தாலும், போக்குவரத்து துறையில் உள்ள சிக்கல்களை அல்லது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 1,950 கோடி ரூபாய் நிதி வழங்கவுள்ளோம்.

கொரோனாவுக்கு பிறகு பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னையில் 69 சதவீதம் பெண்கள் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி வருகின்றன. எனவே மகளிருக்கு இலவச பேருந்து என்பது லாபம் தரும் செயல்பாடாகவே இருக்கிறது என்று கூறினார். 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு, அது அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் எனவும், தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் 4 ஆண்டு ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் சிசிடிவி நடைமுறை கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன என்றார். மேலும் பேசுகையில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் முறையை தற்போது கொண்டு வந்துள்ளோம். இதேபோல் விரைவில் மற்ற மண்டலங்களிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஓட்டுநர், நடத்துனர் எவ்வளவு பேர் தேவை என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து முதல்வரின் கண்காணிப்புக்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு குறித்து பேசுகையில், ஆம்னி பேருந்து என்பது ஒப்பந்த ஊர்தி.

அதற்கு கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக அந்த நிறுவனங்களிடம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். பண்டிகை காலங்களில் மீண்டும் அவர்களுடன் இதுதொடர்பாக பேச இருக்கிறோம். அரசு பேருந்தை குறைந்த கட்டணத்தில் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அரசு பேருந்தை பயன்படுத்தினால் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்.

எனக்கு வாய் நீளமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சமீபத்தில் 957 ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்தோம். அதில் 97 பேர் மட்டுமே கட்டணம் தொடர்பாக புகார் கொடுத்தனர். மற்றவர்கள் விரும்பி தான் பயணிக்கின்றனர். ஆயினும் 11 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. அரசு போக்குவரத்தை நம்பி வந்தவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் தேவைக்கேற்ப ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.