சர்வதேச அளவில் பிரம்மாண்ட சாதனை படைத்த விராட் கோலி!


100வது சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய விராட் கோலி

கோலி சர்வதேச டி20 போட்டிகளில் 30 அரைசதங்கள் அடித்துள்ளார்

மூன்று வித கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியானது, இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு 100வது போட்டியாகும்.

இதன்மூலம் மூன்று வித சர்வதேச கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது வீரர் கோலி ஆவார். 102 டெஸ்ட், 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலிக்கு இன்றைய போட்டி 100 டி20 போட்டி ஆகும்.

நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் இந்த சாதனையை முதன் முதலில் படைத்தார். அவர் 112 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தார்.   

Virat Kohli

PC: Getty Images Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.