விஜய் தேவரகொண்டா அணிந்த ரூ.69,000 மதிப்புள்ள காஸ்ட்லி சட்டை; வைரலாகும் புகைப்படம்

பொதுவாக பெரும்பாலான நட்சத்திரங்கள் வித்தியாசமான உடைகள் அணிந்து வருவது வழக்கம். பேஷனில் ஆர்வம் கொண்ட பிரபலங்கள் பலர் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட காஸ்ட்லியான பிராண்ட்களின் உடைகளை அணிந்து வருகிறார்கள். சில நேரங்களில் பிராண்டுகளே கூட தாமாக முன் வந்து ஸ்பான்ஸர் செய்வதும் உண்டு. அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா அணிந்திருக்கும் வித்தியாசமாக சட்டையும் அதன் விலையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லைகர்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் தேவரகொண்டா, ‘Greg Lauren’ என்ற பிராண்டின் வித்தியாசமாக சட்டையை அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தேவரகொண்டாவின் சட்டை, வெவ்வேறு பேட்டர்ன்களில் வெவ்வேறு துணிகள் சேர்ந்து இருப்பதுபோல் வித்தியாசமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இதன் விலை கிட்டதட்ட ₹69,000. இதனால் திகைத்துப்போன நெட்சன்கள் விஜய்தேவரகொண்டாவையும் அவர் அணிந்திருந்த சட்டையையும் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.