வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபரின் இறுதி சடங்கிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய எம்.எல்.ஏ.

மைசூரு:

மைசூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 36). இவர் கடந்த 26-ந்தேதி வெளியே சென்று இருந்தார். அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்து உள்ளது. கெக்கெரேகுந்தி கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலத்தில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சமயத்தில் மகேஷ் அந்த சாலையை கடக்க முயன்றபோது திடீரென தரைப்பாலம் உடைந்ததில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். போலீசார், தீயணைப்பு படையினர் சேர்ந்து அவரை நேற்றுமுன்தினம் பிணமாக மீட்டனர். இதுகுறித்து ஜெயப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடா, கலெக்டர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதையடுத்து ஜி.டி.தேவேகவுடா அவரது குடும்பத்தினரை சந்தித்து இறுதி சடங்கிற்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். மேலும் மகேசின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அரசிடம் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.