கட்டிடத் திட்டங்களுக்கு Online ஊடாக அனுமதி

அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டிடத் திட்டங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் ஒன்லைன் ஊடாக அனுமதி வழங்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, 337 உள்ளூராட்சி நிறுவனங்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் குறிப்பிட்டார்.

கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்குவதில், 9,000 சதுர அடிக்கு குறைவான நிலப்பரப்பிற்கு உட்பட்டதாக அமையும் கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு

குறித்த நிலம் 9,000 சதுர அடிக்கு மேல் இருந்தால் அல்லது ஐந்து மாடிகளுக்கு மேலான கட்டடமாக இருந்தால் நகர அபிவிருத்தி அதிகாரசபையே அதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.