சட்டவிரோத கட்டுமானம் தகர்ப்பு.! 9 விநாடிகளில்…!

விதிகளை மீறிக் கட்டப்பட்ட நொய்டாவின் இரட்டை கோபுர கட்டிடங்கள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதில் 10 நொடிகளுக்குள் அது கல் மற்றும் மண்குவியலாக மாறியது.

டெல்லியை அடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில் சூப்பர்டெக் நிறுவனம் கட்டிய எமரால்ட் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் 32 மற்றும் 29 மாடிகளைக் கொண்டு இரட்டைக் கோபுர கட்டங்களில் 900க்கும் அதிகமான ஃபிளாட்டுகள் வரை கட்டப்பட்டன.

2012 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 14 மாடிகளை 40 மாடிகளாக உயர்த்திக் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் பெரும் ஊழல் இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் இரட்டை கோபுர கட்டடங்களை தகர்க்க அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது.

இதையடுத்து மும்பையை சேர்ந்த எடிபைஸ் என்ஜினியரிங் என்ற நிறுவனம் மூலம் திட்டமிட்டபடி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு 3700 கிலோ வெடிபொருட்களைப் 7 ஆயிரம் இடங்களில் பயன்படுத்தி இரு கட்டிடடங்களும் தகர்க்கப்பட்டன.

ஒன்பது ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் ஒன்பதே நொடிகளில் தரைமட்டமானது. தகர்ப்பதற்கான பொத்தானை அழுத்தியவர் கட்டடம் இடிந்து விழுவதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.

100 மீட்டர் உயரம் கொண்ட இரு கட்டிடங்களும், இந்தியாவில் இதுவரை தகர்க்கப்பட்ட கட்டிடங்களிலேயே அதிக உயரம் கொண்டவை ஆகும். தூசு படலம் காரணமாக அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. 10 மீட்டருக்கு அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கட்டடங்களைத் தகர்க்கும் போது அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் அளிக்கும் விதமாக 100 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டது.

கட்டிடங்களை தகர்க்க மட்டும் 20 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அதில் 17 கோடியே 50 லட்சம் ரூபாயை சூப்பர்டெக் கட்டுமான நிறுவனமும் எஞ்சிய தொகையை குடியிருப்பு நல சங்கமும் அளிக்கிறது. கட்டடம் இடிக்கப்படுவதை ஒட்டி அப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலைகள் மூடப்பட்டன.

அருகில் குடியிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தப்பட்டனர். கட்டடம் இடிக்கப்பட்ட பின்னர் நேற்று மாலை தங்கள் வீடுகளுக்கு அவர்கள் திரும்பி வந்தனர்.

எரிவாயு மற்றும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு பின்னர் மாலையில் வழங்கப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டடங்களின் 55 ஆயிரம் டன் கழிவுகளை நீக்குவதற்கு லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றை முழுவதுமாக அகற்ற மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.