டயானா பயன்படுத்திய கார்: ரூ.6.11 கோடிக்கு ஏலம்| Dinamalar

லண்டன் : பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய கார், 6.11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசி டயானா, 1997 ஆகஸ்ட் 31ல் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது 25வது நினைவு தினத்தையொட்டி, 1980களில் அவர் பயன்படுத்திய கருப்பு நிற ‘போர்டு எஸ்கார்ட் ஆர்.எஸ்.டர்போ’ கார்’, நேற்று முன்தினம் ஏலத்துக்கு விடப்பட்டது.இதில் உலகம் முழுதுமுள்ள டயானாவின் அபிமானிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அந்த கார், இந்திய மதிப்பில் 6.11 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக, பிரபல ‘சில்வர்ஸ்டோன்’ ஏல நிறுவனம் தெரிவித்தது. ஏலம் எடுத்த நபர் குறித்து, அந்நிறுவனம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.டயானா பயன்படுத்திய மற்றொரு சிறிய ரக போர்டு எஸ்கார்ட் கார், கடந்த ஆண்டு 49 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.