தூங்கி எழுந்ததும் கோடீஸ்வரர் ஆன சுமைதூக்கும் கூலி தொழிலாளி! எவ்வளவு பணம் தெரியுமா?


சுமைதூக்கும் தொழிலாளிக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்.

ஒரே இரவில் பெரும் கோடீஸ்வரர் ஆனார்.

மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்த வந்த நபர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

கேரளாவின் மல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அங்குள்ள மார்க்கெட்டில் சுமைதூக்கும் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ரூ 40 கொடுத்து லொட்டரி டிக்கெட்டை அவர் வாங்கியிருக்கிறார்.

அதற்கு ரூ. 3,57,86,502.26 (இலங்கை மதிப்பில்) பரிசு விழுந்துள்ளது. அந்த சமயத்தில் வீட்டில் ராஜேஷ் தூங்கி கொண்டிருந்தார். தூங்கி எழுந்து ரேஷன் கடைக்கு செல்ல தயாராக இருந்த போது லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என செல்போன் மூலம் பார்த்தார்.

அப்போது தான் இமாலய பரிசு விழுந்ததை உறுதி செய்து கொண்டார்.
இது குறித்து ராஜேஷ் கூறுகையில், ஏழ்மையில் வாடிய எனக்கு இந்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இது எதிர்பாராத ஒரு மாபெரும் அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.

தூங்கி எழுந்ததும் கோடீஸ்வரர் ஆன சுமைதூக்கும் கூலி தொழிலாளி! எவ்வளவு பணம் தெரியுமா? | Porter Become Millionaire Over Night

asianetnewsSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.