விருச்சிகா ஆசனத்தில் உலக சாதனை: 3 சாதனை புத்தகங்களில் இடம்பிடித்த யோகா ஆசிரியை

விருச்சிகா ஆசனத்தில் நின்ற படி, 26 வினாடிகளில், இரு க்யூப்களை சேர்த்து, மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்த யோகா ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சூரிய நாராயணன் – புஷ்பலதா தம்பதியரின் மகள் சந்தியா (25). யோகா ஆசிரியையான இவர், அதே பகுதியில், ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரும், இவரது, 20-க்கும் மேற்பட்ட மாணவர்களும் யோகாவில் பல உலக சாதனைகள் படைத்துள்ளனர். இந்த நிலையில், யோகா ஆசிரியை சந்தியா மீண்டும் ஒரு உலக சாதனை படைத்துள்ளார்.
image
இவர், கடினமான விருச்சிகா ஆசனத்தில் நின்றபடி, இரண்டு வரிசை மற்றும் மூன்று வரிசை க்யூப்களை, 26 வினாடிகளில் சேர்த்து புதிய உலக சாதனை படைத்தார். இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛அசிஸ்ட் உலக சாதனை’, ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. உலக சாதனை படைத்த யோகா ஆசிரியை சந்தியாவை, கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.