100 வாகனங்கள்… 10 லட்சம் விதைகள்… பனைமரம் வளர்ப்பை தொடங்கி வைத்த அமைச்சர்

தமிழக அரசின் வேளாண்மை துறை சார்பில் பனைமரக்காடு திட்டத்தின் மூலம் 100 ஊராட்சியில் 10லட்சம் பனை விதைகளை விதைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் கே. என். நேரு திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி பகுதியில் பனை விதைகளை விதைத்து பணியை தொடங்கி வைத்தார்.

முன்னதாக பனை விதைகள் கொண்டு செல்லும் 100 வாகனங்களை கொடியசைத்து இயக்கி வைத்தும் மாபெரும் பனைமரம் வளர்ப்பு பணியினை தொடங்கி வைத்தார். பனைவிதைகள் விதைக்கும் திருச்சி, சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 39 கிமீ தூரத்தில் சாலையின் இருபுரங்களிலும் பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விதைகள் திருச்செங்கோர், எட்டயபுரம் பகுதிகளிலிருந்து சேகரித்து கொண்டு வரப்பட்டு 100 வாகனங்களில் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு கிராமங்களில் உள்ள நீர்நிலைகளின் கரைகளிலும், ஊராட்சி சாலைகளின் இருபுரங்களிலும் அரசு புறம்போக்கு நிலங்களிலும் இயற்கை அரண் ஏற்படுத்திடும் வகையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்கு டால்மியா சிமெண்ட் பாரத லிமிடெட், திருவாளர்கள் கே.என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன்ஸ் லிமிடெட் கல்பாளையம் சு.கிங்ஸ்ட்லி ரூபன், திருச்சிராப்பள்ளி டாக்டர் டி.ராம் பிரசாத் ஆகிய நிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து பங்களிப்பு செய்துள்ளன. நிதி உதவி அளித்து உதவிய அனைவரையும் அமைச்சர் கே.என்.நேரு  பாராட்டி வாழ்த்தினார்.

க. சண்முகவடிவேல் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.