Tamil news Today Live: கள்ளக்குறிச்சி வழக்கில் உச்சநீதிமன்றத்தை நாட ஸ்ரீமதியின் பெற்றோர் முடிவு

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை. சென்னையில் 100வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேட்டூரில் 1.30லட்சம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு. இதனால்
காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஆசியகோப்பை இன்றைய ஆட்டம்

ஆசியகோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு. 1.05 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 1.50 லட்சம் கன அடியாக உயர்வு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
09:36 (IST) 30 Aug 2022
ஸ்டாலின் கான்வாய் முன் ஸ்டண்ட் – கைது

சென்னை, காமராஜர் சாலையில் முதல்வர் ஸ்டாலின் கான்வாய் வந்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது

ராயப்பேட்டையைச் சேர்ந்த சுஜய்(20) என்பவரை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்து நடவடிக்கை

09:34 (IST) 30 Aug 2022
உலக பணக்காரர்கள் – அதானி 3ஆவது இடம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறினார் கெளதம் அதானி

ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் பட்டியலில் 3ஆவது இடம் பிடிப்பது இதுவே முதல்முறை ஆகும்.

09:33 (IST) 30 Aug 2022
கள்ளக்குறிச்சி வழக்கில் உச்சநீதிமன்றத்தை நாட ஸ்ரீமதியின் பெற்றோர் முடிவு

கள்ளக்குறிச்சி வழக்கில் உச்சநீதிமன்றத்தை நாட ஸ்ரீமதியின் பெற்றோர் முடிவு எனத் தகவல்

பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல திட்டம்

08:31 (IST) 30 Aug 2022
கோயம்பேடு சந்தையில் பூ விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

மல்லிகை கிலோ ரூ.800க்கும், முல்லை ரூ.500க்கும், சம்பங்கி கிலோ ரூ.150க்கும், ரோஜா ரூ.160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

08:28 (IST) 30 Aug 2022
சிறுமி டானியாவை நேரில் சந்தித்த முதல்வர்

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

எதை பற்றியும் கவலை வேண்டாம், விரைவில் பள்ளிக்கு செல்லலாம் என சிறுமிக்கு தைரியம் அளித்தார்.

08:28 (IST) 30 Aug 2022
பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

22:24 (IST) 29 Aug 2022
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்; உயர்நீதிமன்றம் கருத்து

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில், தற்கொலை கடிதம் மற்றும் சக மாணவிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் வேதியியல் படிப்பதில் மாணவி சிரமப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளியின் 3வது மாடியில் இருந்தது மாணவியின் ரத்தம் அல்ல, வண்ணப்பூச்சு என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தது தவறு எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்

21:42 (IST) 29 Aug 2022
ஜெ. மரணம்; சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் ஆகியோரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது

21:38 (IST) 29 Aug 2022
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; கொலைக்கான ஆதாரங்கள் இல்லை

ஜிப்மர் குழு அறிக்கை மூலம் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கான ஆதாரங்கள் இல்லை. பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் எதுவும் இல்லை என கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்

20:28 (IST) 29 Aug 2022
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முடிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை, ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

19:56 (IST) 29 Aug 2022
ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு

சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை நீதிமன்றம் மூலம் மாற்றி அமைக்க முடியாத வகையில் இயற்ற ஆலோசனை நடைபெற்றது

19:28 (IST) 29 Aug 2022
என் வீட்டில் எதற்கு நானே திருட வேண்டும்? தேனியில் தொண்டர்கள் மத்தியில் ஓ.பி.எஸ் பேச்சு

அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்ட யார் அதிகாரம் கொடுத்தது. என் வீட்டில் எதற்கு நானே திருட வேண்டும்?. ரத்தம் சிந்தி வளர்ந்த இயக்கம் அதிமுக; அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு கட்சியை பாதுகாக்க வேண்டும் என தேனியில் தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்

19:11 (IST) 29 Aug 2022
டெல்லி துணை முதல்வர் வங்கி லாக்கரில் நாளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை நாளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதனையடுத்து லாக்கரில் எதுவும் இருக்காது என்றாலும் சிபிஐ அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம் என மணீஷ் சிசோடியா ட்வீட் செய்துள்ளார்

18:55 (IST) 29 Aug 2022
வேளாங்கண்ணி மாதா கோயில் கொடியேற்றம்

நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோயிலில் இன்று மாலை கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து தேவாலயம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.

18:37 (IST) 29 Aug 2022
மு.க. ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

18:35 (IST) 29 Aug 2022
கடைசி நேரத்தில் விண்கலம் நிறுத்தம்

நிலவுக்கு ஆர்ட்டிமிஸ் என்ற விண்கலம் நிறுத்த நாசாடி முடிவு செய்திருந்தது. இந்த விண்கலம் இன்று ஏவப்பட இருந்த நிலையில், கடைசி நேர்தில் எரிபொருள் நிரப்பும் இடத்தில் கசிவு கண்டறியப்பட்டது.

இதையடுத்து ராக்கெட் ஏவுதல் நிறுத்தப்பட்டது.

18:32 (IST) 29 Aug 2022
பிரேசில் கடைசி பழஙகுடி காலமானா்

பிரேசிலில் மனித தொடர்பு இல்லாம் வாழ்ந்த கடைசிப் பழங்குடியும் காலமானார்.

17:19 (IST) 29 Aug 2022
சேலத்தில் போலி மருத்துவர்கள் கைது

சேலத்தில் 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். 8ஆம் வகுப்பு வரை படித்துள்ள இருவரும் பேஸ்புக் மூலம் நண்பர்கள் ஆகியுள்ளனர்.

17:03 (IST) 29 Aug 2022
ஓணம் பண்டிகை: நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது இதற்காக செப்.17ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

16:51 (IST) 29 Aug 2022
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் உள்பட 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் – ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையிலும், 2 ஆசிரியைகள் என 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையிலும், 2 ஆசிரியைகள் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று ஜாமீன் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது; மாணவர்களை படிக்க அறிவுறுத்துவது ஆசிரியர் பணியின் ஒரு அங்கம்; மாணவியை படிக்க அறிவுறுத்தியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது. ஆசிரியர்கள் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16:37 (IST) 29 Aug 2022
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தாவில் அக்டோபர் முதல் 5ஜி சேவை – ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அந்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசியபோது, ​​ஜியோ டிசம்பர் 2023 க்குள் 5G சேவையை நாடு முழுவதும் வெளியிடும் என்று அறிவித்தார்.

ரிலையன்ஸ் நிறுவனம் தீபாவளி முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என தெரிவித்துள்ளது.

ஜியோவின் 5ஜி நெட்வொர்க் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியைத் தெரிவித்துள்ளது. அடுத்த தலைமுறை மொபைல் எல்டிஇ நெட்வொர்க் இந்த ஆண்டு அக்டோபரில் வரும் தீபாவளியிலிருந்து வெளிவரத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவின் 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் போது ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தது. ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்த ஆண்டு அக்டோபரில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் 5ஜி சேவை கிடைக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. சரியான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட விலலை. 2023 டிசம்பருக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வெளியாகும் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.

16:27 (IST) 29 Aug 2022
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு; தேர்வு மையத்தில் அனைவரையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் – சிபிஐ

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனுவில், நீட் தேர்வு மையத்தில் தேர்வர்கள் அனைவரையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்; கவுன்சிலிங்கில் தேர்வர்களின் கைரேகை பதிவு செய்யும் முறையை 3 இடங்களில் கொண்டு வர வேண்டும்; பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகளை பயன்படுத்தியும் முறைகேடுகளை தவிர்க்கலாம் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

16:22 (IST) 29 Aug 2022
ஓணம் பண்டிகைக்காக நீலகிரி மாவட்டத்தில் செப். 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஓணம் பண்டிகையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளுக்கு ஈடாக செப்டம்பர் 17ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

15:56 (IST) 29 Aug 2022
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: விரைவாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலவரம் குறித்து 202 பேர் கைது என சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்க புதிய திட்டம் வகுத்துள்ளதால் அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

15:13 (IST) 29 Aug 2022
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக 4 பேர் மீது குண்டர் சட்டம்

கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாடு திருடியதாகவும் போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் கைதான 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது 4 பேரையும் குண்டர் தடுப்புச் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

15:11 (IST) 29 Aug 2022
தீபாவளி முதல் இந்தியாவில் 5ஜி சேவை – ஜியோ நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் தீபாவளி முதல் அமலுக்கு வரும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் முதல்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படும் என்றும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 5ஜி அமல்படுத்தப்படும் என்றும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது

14:25 (IST) 29 Aug 2022
6 தமிழ் மீனவர்களுக்கு இலங்கையில் செப்.12ம் தேதி வரை சிறை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களையும் வரும் 12ம் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14:22 (IST) 29 Aug 2022
கொடநாடு வழக்கு – தனிப்படை விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

13:48 (IST) 29 Aug 2022
சாத்தான்குளம் வழக்கு – இறுதி அவசாகம்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு இறுதியாக 4 மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

13:30 (IST) 29 Aug 2022
யானை மிதித்து ஒருவர் பலி

தென்காசி அருகே தமிழக – கேரள எல்லை பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவும் சாலையின் ஓரமாக நிற்கும் யானைகளை பயமுறுத்தவோ, கற்களை வீசவோ வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர் காட்டு யானை மிதித்ததில் உயிரிழந்துள்ளார்

13:05 (IST) 29 Aug 2022
டெல்லி சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த அரவிந்த் கெஜ்ரிவால்

சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமளி – வெளியேற்றம்

பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் தோல்வி என்பதை நிரூபிக்கவே தீர்மானம் – கெஜ்ரிவால்

12:53 (IST) 29 Aug 2022
17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

12:50 (IST) 29 Aug 2022
கோப்ரா – இணையத்தில் வெளியிட தடை

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

1,788 இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

12:11 (IST) 29 Aug 2022
‘நான் முதல்வன் திட்டம்’ எனது கனவு திட்டம் – ஸ்டாலின் உரை

‘நான் முதல்வன் திட்டம்’ எனது கனவு திட்டம் – ஸ்டாலின் உரை

திறன் மேம்பாட்டுத் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

12:05 (IST) 29 Aug 2022
படியில் பயணம் – பள்ளி மாணவன் உயிரிழப்பு

மதுரை: ஆரப்பாளையம் பகுதியில் படிக்கட்டில் பயணம் செய்த 9ஆம் வகுப்பு மாணவன் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

11:48 (IST) 29 Aug 2022
அர்ச்சகர் நியமனம் – தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கோயில்களில் புதிதாக அர்ச்சகர்களை நியமிக்கவும், நீக்கவும் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கு

அர்ச்சகர்களை நியமனம் செய்யவும், பணி நீக்கவும் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

11:27 (IST) 29 Aug 2022
திறன் மேம்பாட்டுத் திட்டம் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

11:11 (IST) 29 Aug 2022
வீடு என்பது பலரது கனவு!

கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது! நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன. எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு.

இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை திரு.சரபேஸ்வரர் அவர்களிடம் 1955ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார்..அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் தலைவர் கலைஞர்.

அன்று தனக்குத் திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, அமெரிக்காவிலிருந்து திரும்பிய திருமிகு. சரோஜா சீதாராமன் அவர்கள் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது – முதல்வர் ஸ்டாலின்

10:33 (IST) 29 Aug 2022
தாய்வழியில் சாதி சான்றிதழ் வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும்

கேரளா மாநிலத்தை போன்று புதுச்சேரியிலும் தாய்வழியில் சாதி சான்றிதழ் வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என முதல்வர் ரங்கசாமி பேரவையில் தகவல். தந்தை வழியில் தான் சாதி சன்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவாக உள்ளது

09:57 (IST) 29 Aug 2022
பராமரிப்பு பணி – 191 ரயில்கள் சேவை ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் இன்று 191 ரயில்களின் சேவை ரத்து.

09:57 (IST) 29 Aug 2022
பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு – கைது

சென்னை, வடபழனியில் உள்ள உணவகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் வினோத் என்பவர் கைது – ஒருவருக்கு வலைவீச்சு.

09:06 (IST) 29 Aug 2022
காணாமல் போன சிலைகள் கண்டுபிடிப்பு

நாகை: 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள் அமெரிக்க அருங்காட்சியங்களில் கண்டுபிடிப்பு . ஒரு சிலை மட்டுமே காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், 11 சிலைகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

09:05 (IST) 29 Aug 2022
வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா

உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம். பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.