பாகிஸ்தானில் கனமழை, பெருவெள்ளத்துக்கு 320 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் கனமழை, பெருவெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 320ஆக அதிகரித்துள்ள நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பார்வையிட்டார். கடந்த 5 வாரங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக முழ்கியுள்ளன. இதுவரை அந்த மாகாணத்தில் 46 சிறுவர்கள் உள்பட 127 பேரும், கராச்சி, சிந்து மாகாணங்களில் 70 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 30 கிலோ மீட்டர் ஆழத்தில் … Read more

விளாடிமிர் புடினின் முக்கிய அதிகாரி மருத்துவமனையில் அனுமதி: விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம்

உக்ரைன் படையெடுப்புக்கு எதிராக குரல் கொடுத்து நாட்டைவிட்டு வெளியேறிய புடினுக்கு நெருக்கமான முக்கிய அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகப்படும் சூழலில், கை கால்களில் உணர்வற்ற நிலையில் அனடோலி சுபைஸ் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவுக்கு வெளியே, பெயர் குறிப்பிடப்படாத ஐரோப்பிய நாடு ஒன்றில் அவர் தங்கியிருப்பதாகவும், அங்குள்ள மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளரும் முன்னாள் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான Ksenia Sobchak என்பவரே குறித்த … Read more

பாகிஸ்தானில் கனமழையில் சிக்கி 320 பேர் உயிரிழப்பு

பாலுசிஸ்தான்: பாகிஸ்தானில் கனமழையில் சிக்கி 320 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 13 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இதுமட்டுமின்றி, இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 320 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

சென்னை : பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர இன்று முதல் வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. http://tnmedicalselection.org, http://thhealth.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சிகிச்சை தோல்வி குரங்கம்மை பாதித்தவர் சாவு: அதிகாரிகள் அவசர ஆலோசனை

திருவனந்தபுரம்: கேரளாவில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்து விட்டது. கடந்த மாதம் துபாயிலிருந்து கேரளா வந்த கொல்லத்தை சேர்ந்த 35 வயதான வாலிபருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மலப்புரம், கண்ணூரை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் இந்த நோய் பரவியது. இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி துபாயிலிருந்து வந்த திருச்சூரை … Read more

“இந்த ஆட்சியில் வேட்டியை யாராலும் கழட்ட முடியாது. ஏனென்றால்…”- அமைச்சர் அன்பில் மகேஷ்

“எங்கள் ஆட்சியில் வேட்டியை யாராலும் கழட்ட முடியாது. நடப்பது முதல்வர் ஸ்டாலின் ஆட்சி” என கோவை புத்தகத் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா கடந்த பத்து நாட்களாக கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. 3 லட்சத்திற்கும் மேல் மக்கள் கலந்துகொண்ட இந்த புத்தகத் திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டது. இதன் நிறைவு விழாவான நேற்று, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் … Read more

பெண் கொலையில் 4 பேர் கைது| Dinamalar

தங்கவயல் : தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை பச்சப்பா சாலையில் பூ வியாபாரி சுலோச்சனா, 57, அவரது வீட்டில், ஜூலை 15 ல் தனியாக இருந்துள்ளார்.இவரை, மர்ம கும்பல் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, நகை, பணத்துடன் தலைமறைவாயினர். அவரது கணவர் சேகர், போலீசில் புகார் செய்தார்.பூக்கடையில் வேலை செய்து வந்த மணிகண்டன், 28, ஆகாஷ், 25, சஞ்சய், 24, மெக்கானிக் ரவிகிரண், 27, ஆகியோர் கைது செயயப்பட்டனர். தாலி செயின் பறிமுதல் செயயப்பட்டது. வீட்டிலிருந்து 1.20 லட்சம் … Read more

பிலிப்பைன்ஸ் மாஜி ஜனாதிபதி பிடல் ராமோஸ் காலமானார்| Dinamalar

மணிலா : பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிடல் வால்டெஸ் ராமோஸ் 94, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ராமோஸ் கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் காலமானார். கொரிய மற்றும் வியட்நாம் போர்களில் திறம்பட செயலாற்றியதோடு 1986ல் ஜனநாயக வழியில் போராடி பிலிப்பைன்ஸின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் … Read more

6 நாள் முடிவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எவ்வளவு? நேற்று மட்டும் இத்தனை கோடியா?

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் ஆறு நாட்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை 1.50 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் போயுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளன. முதல் நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் லட்சம் கோடி ஏலம் போன பிறகு அடுத்தடுத்த நாட்களில் ஒரு சில நூறு கோடிகள் மட்டுமே ஏலம் போனது என்பதும், நேற்று 6-வது நாளில் ரூ.163 கோடிக்கு ஏலம் போய் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று 7வது நாளாகவும் ஏலம் நடக்கவிருக்கும் … Read more