கனடாவில் மனைவியை அடித்தே கொலை செய்த இந்தியர்: வெளியான புகைப்படம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடும்ப வன்முறையால் இந்திய தாயார் ஒருவர் மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Abbotsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஆபத்தான நிலையில் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவ உதவிக்குழுவினர் முதலுதவி அளித்த நிலையில், சம்பவயிடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை, அவரது கணவர் 48 வயதான இந்தர்ஜித் சாந்து என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர் மீது முதல் நிலை கொலை வழக்கும் … Read more

காமன்வெல்த் குத்துச்சண்டை – காலிறுதியில் இந்தியா

பர்மிங்காம்: காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியின் 92 கிலோ எடைப்பிரிவில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், குத்துச்சண்டை போட்டியின் 92 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சாகர் கேமரூனின் மேக்சிம் யெக்னாங் என்ஜியோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆண்களுக்கான 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தகுதி பெற்றுள்ளார்.

அமலாக்கத் துறையிடம் சிக்கியது என் பணமல்ல: அமைச்சர் பார்தா புலம்பல்

கொல்கத்தா: அமலாக்கத் துறை சோதனையில் சிக்கியது தனது பணம் அல்ல என்று மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்தா சட்டர்ஜி புலம்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜியையும், அவருடைய உதவியாளரும், தமிழ் நடிகையுமான அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அர்பிதாவின் வீடுகளில் பதுக்கியிருந்த ரூ.49 கோடி பணம், 6 கிலோ தங்கக் குவியல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஜோகாவுக்கு அழைத்து … Read more

பயங்கரவாதிகளுடன் தொடர்பு 3 பேரை கைது செய்த என்.ஐ.ஏ.,| Dinamalar

துமகூரு, : ஐ.சி.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக பட்கல்லில் இருவரும், துமகூரில் ஒருவரும் என மூன்று பேரை, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஐ.சி.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் கர்நாடகாவில் இருப்பதாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு, டில்லியை சேர்ந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் மூன்று நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் இரவு, உத்தர கன்னடாவின் பட்கல்லில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் ஒருவரான … Read more

சுகாதார அவசர நிலை பிரகடனம்| Dinamalar

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில், 75 நாடுகளில் குரங்கு அம்மை நோயால், 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம், குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பாக, சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. உலக நாடுகள் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக, அவசர நிலை … Read more

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

ஈரோடு மாவட்டத்தில் மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார், அப்பகுதியில் உள்ள ஜே.ஜே.நகர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையுடன் வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மது பாட்டில்களை கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், … Read more

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சென்னை: “தமிழகத்தைப் பொருத்தவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. குரங்கு அம்மை பாதிப்பு யாருக்காவது ஏற்பட்டால், அடுத்த விநாடியே ஊடகவியலாளர்களை அழைத்து நான் தெரிவிப்பேன். காரணம் ஒரு நோய் பாதிப்பை பொதுமக்கள் உணர்ந்து கொண்டால்தான், அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். எனவே எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது … Read more

சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடி: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 91-வது ‘மனதின்குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி … Read more