கேரளாவில் பரிதாபம்: ஆம்புலன்ஸ் கதவுகளை திறக்க முடியாததால் நோயாளி பரிதாப சாவு

திருவனந்தபுரம்:கேரள மாநிலம், கோழிக்கோடு   அருகே உள்ள பரோக் பகுதியைச் சேர்ந்தவர் கோயா (66). இவர் அங்குள்ள ஒரு   நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டுக்கு   நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு ஸ்கூட்டர் மோதியது. இதில்   பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு   சென்றனர். ஆனால், நிலைமை மோசமாக இருந்ததால் அங்கிருந்து ஒரு ஆம்புலன்சில்   ஏற்றி அவரை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி   வைத்தனர். அந்த ஆம்புலன்சில் ஒரு … Read more

ரூ.200 கோடி பண மோசடி நடிகை ஜாக்குலினுக்கு உயர் நீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான ரூ200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு டெல்லி நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு மோசடிகளில் சம்பந்தப்பட்டவர். இவர் திகார் சிறையில் இருந்தபடியே போன் மூலமாக தொழிலதிபர்களை மிரட்டி ரூ200 கோடி பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் … Read more

வெற்றி நடிக்கும் 'பம்பர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

'ஜீவி 2' படத்திற்கு பிறகு நடிகர் வெற்றி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'பம்பர்'. கேரளா லாட்டரி கதைக்களத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் முத்தையாவிடம் உதவி இயக்குனராக இருந்த செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடி, தங்கதுரை ஆகியோர் நடித்து வருகிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைக்க, வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் … Read more

இந்தியாவிலிருந்து உணவு பொருள் இறக்குமதி செய்ய பாக்., திட்டம்| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய, பாக்., அரசு திட்டமிட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த ஒரு மாதமாக பலத்த மழை பெய்து வருகிறது. நாட்டில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. விளைநிலங்கள் முற்றிலும் நாசமடைந்து விட்டன. இதனால் வெங்காயம், தக்காளி, அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளது. … Read more

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்..யார் யார் என்ன வாழ்த்து சொன்னாங்க தெரியுமா?

சென்னை : இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. ஏராளமான திரையுலக பிரபலங்களும் இன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வரும் நிலையில், சமூகவலைத்தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் … Read more

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி

புதுடெல்லி, நடப்பு நிதி ஆண்டின் (2022-2023) ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. வேளாண்மை, சேவை ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு காரணம். சீனா இதே காலாண்டில் வெறும் 0.4 சதவீத பொருளாதார வளர்ச்சியையே எட்டி உள்ளது. இதன் மூலம், வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. முதலாவது காலாண்டில், நாட்டின் … Read more

டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீராங்கனை அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டி ஒன்றில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிக் ஸ்விட்சர்லாந்து நாட்டின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்ட்ரியா பெட்கோவிக் 2-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த நிலையில் இந்த தோல்வியை தொடந்து அவர் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 … Read more

சினூக் ஹெலிகாப்டர்கள் பறக்க அமெரிக்கா தற்காலிக தடை

வாஷிங்டன், போயிங் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சினூக் ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவ வீரர்களை பல்வேறு அழைத்துச் செல்லவும், சரக்குகளை ஏற்றிச் செல்லவும் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அடிக்கடி எஞ்சின் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவதை அடுத்து அமெரிக்க பாதுகாப்புப் படையில் பயன்பாட்டில் உள்ள 400 சினூக் ஹெலிகாப்டர்களையும் பயன்பாட்டிலிருந்து நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.ஆனால், இந்திய விமானப் படையில் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து சினூக் ஹெலிகாப்டர்களையும் அமெரிக்க ராணுவம் நிறுத்துவதற்கான முழு … Read more

இந்திய பொருளாதாரம் முதல் காலாண்டில் 13.5% வளர்ச்சி

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) புதன்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டின் 2022-23 ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் (Q1) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.2021-22 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் GDP 20.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2022-23 (FY23) காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரட்டை இலக்கங்களில் வளரும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். உண்மையான GDP வளர்ச்சி விகிதம் 13-16.2 சதவீதத்தில் … Read more

#BREAAKING : தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர், … Read more