தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு..!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாளைய தினம் நீலகிரி, கோவையில் மிக … Read more

திருச்சி | ராகுல் காந்தியின் நடைபயணத்தையொட்டி தமிழகம் முழுவதும் செப். 3-ல் உண்டியல் ஏந்தி நிதி வசூல்: கே.எஸ்.அழகிரி

திருச்சி: ராகுல் காந்தியின் நடைபயணத்தை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் செப்.3-ம் தேதி உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செப்.7-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஒற்றுமைநடைபயணத்தைத் தொடங்குகிறார். இதுதொடர்பாக திருச்சியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி,செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல்காந்தி செப்.7-ம் … Read more

இளைஞனை வயிற்றில் எட்டி உதைத்த இராணுவ அதிகாரி சிக்கலில்

குருநாகல் யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ லெப்டினன்ட் கேணல் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் மற்றுமொரு இராணுவ அதிகாரியும் குறித்த நபரை தாக்குவதை அவதானித்து அவரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த பரிந்துரைகளை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தி அறிவிக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. தேசிய … Read more

ஜேர்மன் அரசு ஊழியர்களில் ஊடுருவிய ரஷ்ய உளவாளிகள்: வெளிவரும் பகீர் பின்னணி

பொருளாதார அமைச்சகத்தின் இரண்டு அரசு ஊழியர்களை ஜேர்மன் உளவுத்துறையினர் விசாரணை இந்த விவகாரத்தில் சிக்கிய இருவர் தொடர்பில் கருத்து தெரிவிக்க பொருளாதார அமைச்சகம் மறுப்பு ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் பொருளாதார அமைச்சகத்தின் இரண்டு அரசு ஊழியர்களை ஜேர்மன் உளவுத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். குறித்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் உளவுத்துறை மற்றும் பெடரல் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் தரப்பும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். ஜேர்மன் பொருளாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்ட … Read more

பருத்தி விலை குறைந்த நிலையில் 20 நாளில் பஞ்சு விலை ரூ15 ஆயிரம் அதிகரிப்பு: வியாபாரிகள் வேதனை

சேலம்: பருத்தி விலை குறைந்த நிலையில், கடந்த 20 நாளில் ஒரு கேண்டி பஞ்சு ரூ15 ஆயிரம் வரை விலை உயர்ந்திருப்பதாக நூல் வியாபாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்க தலைவர் ராசி.சரவணன் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் வியாபாரிகள் உள்ளனர். இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ100 கோடி அளவுக்கு ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிலை … Read more

பாஜ இல்லாத இந்தியா சந்திர சேகர் அழைப்பு: பீகாரில் நிதிஷுடன் சந்திப்பு

பாட்னா:பாஜ இல்லாத இந்தியா’வை உருவாக்க, எதிர்க்கட்சிகள் ஓன்றிணைய வேண்டும்,’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் சமீபத்தில் பாஜ கூட்டணியை முறித்து கொண்டார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளடன் இணைத்து, பீகாரில் புதிய ஆட்சியை அமைத்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வை தோற்கடிப்பதற்காகன வியூகங்களை அவர் வகுத்து வருகிறார். இந்நிலையில், பாஜ.வுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் தெலங்கானா முதல்வர் … Read more

செப்., 6ல் ‛பொன்னியின் செல்வன்' இசை – டிரைலர் வெளியீடு

சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை அதே பெயரில் பிரமாண்ட படமாக இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார் மணிரத்னம். முதல்பாகம் செப்., 30ல் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்ய ராய், திரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தாண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே டீசர், இரண்டு பாடல்கள் வெளியானது. இப்போது செப்., 6ல் படத்தின் இசை, … Read more

பிரிட்டன் பிரதமர் தேர்தல் இந்திய வம்சாவளி நம்பிக்கை| Dinamalar

லண்டன்:பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் பழமைவாத கட்சித் தலைவர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வெற்றி கிடைக்கும் என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடந்து வந்தது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியான … Read more

சூர்யாவிற்கு நடந்த விபத்து… கே.எஸ்.ரவிக்குமாரை இன்னும் அதிர்ச்சியில் வைத்துள்ள சம்பவம்

சென்னை: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தற்சமயம் படங்களை தயாரிப்பது நடிப்பது என்று பிசியாக இருக்கிறார். இன்று ரிலீஸ் ஆகியுள்ள கோப்ரா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் சூர்யாவிற்கு நடந்த விபத்து பற்றி கூறியுள்ளார். ஆதவன் மிகப்பெரிய கமர்சியல் இயக்குநராக கே.எஸ்.ரவிக்குமார் இருந்த அந்தக் காலகட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது கம்பெனிக்காக ஒரு படம் இயக்க ஒப்பந்தம் செய்த போது நடிகர் சூர்யாவை வைத்து ஆதவன் என்கிற படத்தை மூவரும் துவங்கினார்கள். … Read more