ஸ்னாப் சாட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஸ்னாப் 20 சதவீதம் ஊழியர்களைக் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அண்மையில் கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இப்போது ஸ்னாப் சாட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்னாப் சாட் நிறுவனம் ஊழியர்களைக் குறைக்க என்ன காரணம். அதற்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும் என்ன சம்மதம் என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ராஜஸ்தானில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.20000 வரை விலை குறைவு.. தமிழ்நாட்டில் என்ன நிலை?

ஸ்னாப் சாட்
ஸ்னாப் சாட் நிறுவன தலைமை நிர்வாகி ஈவன் ஸ்பிஜெல், “தங்களது சேவை விற்பனை தொடர்ந்து முன்னேற்றத்தில் செல்லாமல் தேக்க நிலையில் உள்ளது. எனவே தவிர்க முடியாத காரணங்களால் வருவாயும் அரிந்துள்ளது. அதனால் ஏற்பட்டு வரும் செலவுகளைக் குறைக்க ஊழியர்களைக் குறைக்க முடிவு எடுத்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.

ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் தங்களது பயனர்களின் தனியுரிமை கொள்கையில் திருத்தம் செய்தது. அதனால் பல்வேறு சமூக வலைத்தளங்களில் முதலீட்டாளர்களைப் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும் தனியுரிமை கொள்கை திருத்தத்தால் ஸ்னாப் சாட் உள்ளிட்ட செயலிகளின் வருமானம் சரிந்துள்ளது.

பேஸ்புக்
பெரும்பாலான சமூக ஊடக தளங்கள் விளம்பர வருவாயைப் பெரிதும் நம்பியுள்ளன, தனியுரிமைக் கட்டுப்பாடுகளில் ஆப்பிளின் சமீபத்திய மாற்றங்களை பேஸ்புக் வெளிப்படையாக அண்மையில் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

லாபம்
ஸ்னாப் சாட் நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து 2021-ம் ஆண்டு தான் முதல் முறையாக லாபத்தைப் பதிவு செய்தது. ஆனால் இப்போது வருவாய் இழப்பில் உள்ளது. இப்போது வருமானம் சரிந்துள்ளதால் தவிர்க முடியாமல் இந்த பணிநீக்கம் முடிவை எடுத்துள்ளது.

ஊழியர்கள் எண்ணிக்கை
2021-ம் ஆண்டின் படி ஸ்னாப் சாட் நிறுவனத்தில் 5,661 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 20 சதவீதம் வரை ஊழியர்கள் இப்போது குறைய உள்ளனர்.
Snap hurt by a privacy crackdown that rolled out on Apple’s and Does Job Cut
Snap hurt by a privacy crackdown that rolled out on Apple’s and Does Job Cut | ஆப்பிள் எடுத்த முடிவால் 20% ஊழியர்களைக் குறைக்கும் ஸ்னாப் சாட்..!