செங்கல்பட்டு மாவட்டத்தில் மனைவி கண்டித்ததால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சூலேரிக்காடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மோகன்(47). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், மது குடிப்பதற்காக மனைவிடையே பணம் கேட்டுள்ளார்.
ஆனால் மோகனின் மனைவி பணம் தர மறுத்துவிட்டு, இதனை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மோகன், தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து மோகனை மீட்டு சிகிச்சைக்காக திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.