சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி இணைந்து மாவட்ட பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டி எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை 3-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை மூன்று நாட்கள் போட்டி நடைபெறுகிறது. சிறுவர்கள் பிரிவில் 25 பள்ளிகளும், சிறுமிகள் பிரிவில் 16 பள்ளிகளும் ஆக மொத்தம் 41 அணிகள் பங்கேற்கின்றன.
இப்போட்டியில், வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகையுடன் சான் அகாடமியின் கோப்பைகள் வழங்கப்படும். இது தவிர தனி நபர் பரிசு தொகையும் அளிக்கப்படும். மேற்கண்ட தகவல்களை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர். அர்ஜுன் துரை தெரிவித்துள்ளார்.