
மகன்களுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினி
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினியும் பிரிவதாக அறிவித்த பிறகு அவ்வப்போது தங்கள் மகன்களுடன் இருவரும் தனித்தனியாக போட்டோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் தங்களது மூத்த மகன் யாத்ரா தன்னுடைய பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவி ஏற்றதற்காக அந்த பள்ளிக்கு தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி இருவரும் சென்றிருந்தார்கள். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை தனது மகன்கள் லிங்கா, யாத்ரா ஆகியோருடன் கொண்டாடியுள்ள ஐஸ்வர்யா ரஜினி அவர்களுக்கு கொழுக்கட்டை ஊட்டிவிடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.