மிரட்டல் விடுத்த G7 நாடுகளின் தலைவர்கள்… மொத்த ஐரோப்பாவுக்கும் அதிர்ச்சி அளித்த புடின்


ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை

ரஷ்யாவின் Gazprom தடாலடியாக Nord Stream திட்டமூடாக ஐரோப்பாவிற்கு எரிவாயு வழங்கலை நிறுத்தியுள்ளது

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் G7 நாடுகள் மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களில், ஐரோப்பாவுக்கான மொத்த எரிவாயு வழங்கலையும் நிறுத்தி ரஷ்யா பதிலடி அளித்துள்ளது.

குளிர்காலம் நெருங்கிவரும் நிலையில் தேவையான எரிசக்தியை கொள்முதல் செய்யும் நோக்கில் ஐரோப்பிய நாடுகள் முயற்சிகள் முன்னெடுத்துவரும் நிலையில், ரஷ்யாவின் Gazprom தடாலடியாக Nord Stream திட்டமூடாக எரிவாயு வழங்கலை நிறுத்தியுள்ளது.

மிரட்டல் விடுத்த G7 நாடுகளின் தலைவர்கள்... மொத்த ஐரோப்பாவுக்கும் அதிர்ச்சி அளித்த புடின் | Nord Stream Russia Closed Indefinitely

@reuters

மேலும், முக்கிய பகுதியில் கசிவு ஏற்பட்டதன் காரணமாகவே எரிவாயு வழங்கலை நிறுத்தியுள்ளதாக Gazprom விளக்கமளித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் முடித்து சனிக்கிழமை மீண்டும் எரிவாயு வழங்கலை துவங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவின் கடும் குளிர்காலத்தில் மக்களின் நிம்மதியை விளாடிமிர் புடினின் இந்த முடிவு கெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரேனில் தொடர்ந்து போரை நடத்தி வரும் புடினின் கஜானாவைக் குறி வைக்கும் முயற்சியில் ரஷ்ய எண்ணெய் மீது விலை வரம்புகளை விதிக்க G7 தலைவர்கள் ஒப்புக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டல் விடுத்த G7 நாடுகளின் தலைவர்கள்... மொத்த ஐரோப்பாவுக்கும் அதிர்ச்சி அளித்த புடின் | Nord Stream Russia Closed Indefinitely

@reuters

மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் எந்த ஒரு நாட்டுக்கும் எண்ணெய் விற்பனையை முன்னெடுக்க தாங்கள் தயாராக இல்லை எனவும் ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.
சவுதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது.

மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராகவு ரஷ்யா உள்ளது. மேலும், ஐரோப்பா தனது 40 சதவீத எரிவாயுவையும் 30 சதவீத எண்ணெயையும் ரஷ்யாவிலிருந்தே இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மிரட்டல் விடுத்த G7 நாடுகளின் தலைவர்கள்... மொத்த ஐரோப்பாவுக்கும் அதிர்ச்சி அளித்த புடின் | Nord Stream Russia Closed Indefinitely

@reuters



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.