சென்னை : வெந்து தணிந்தது காடு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிம்பு ஹெலிகாப்டரில் வந்து மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெந்து தணிந்தது காடு
விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடையடா படங்களைத் தொடர்ந்து டைரக்டர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது மூன்றவது முறையாக இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் சிம்பு, முத்து என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், டீசர், பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளன.

டிரைலர் வெளியீட்டு விழா
சிம்புவை கிராமம், நகரம் என இரு வேறு கெட்டப்பில் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு படத்தின் தயாரிப்பாளளர் ஐசரி கணேஷன் அழைப்பு விடுத்திருந்தார்.

பிரம்மாண்ட செட்
இந்த இசை வெளியீட்டு விழாவிற்காக மட்டும் படக்குழு ரூ.3 கோடி செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெந்து தணிந்தது படத்தின் நாயகன் சிம்பு, ஹெலிகாப்டர் மூலம் இசை வெளியீட்டு விழாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த மாஸ் என்ட்ரியை பார்த்த ரசிகர்கள் மட்டுமில்லாமல் கோலிவுட் பிரபலங்களே மிரண்டு போனார்கள். பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

ஐந்து பாடல்கள்
இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது என்பது சற்றுமுன் வெளியாகி உள்ள டிராக்லிஸ்ட் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார் என்பதும் ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.