காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொபட் மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.
சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி(31). இவர் நேற்று பல்லாவரம் சென்றுவிட்டு மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது ஆசர்கானா பேருந்து நிலையம் அருகே உள்ள வளைவில் திரும்பியபோது பின்னால் வந்த மாநகர பேருந்து ராஜேஸ்வரி மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேஸ்வரி மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.