கேப் கேன்சல் செய்த பெண்.. ரூ.94,367 இழந்த பரிதாபம்.. என்ன நடந்தது..?!

வாடகை கேப் வண்டியை புக் செய்த பெண்மணி ஒருவர் அந்த பயணத்தை கேன்சல் செய்ததால் ரூ.94,367 ஏமாந்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் மூலம் பயணம் செய்ய கார் புக் செய்த பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென அந்த பயணத்தை கேன்சல் செய்தார்.

இதற்காக கேன்சல் கட்டணத்தை செலுத்த முற்படும் போது அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ₹94,367 மோசடி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஸ்மால் கேப் பங்கினை வாங்க பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. இலக்கு விலை எவ்வளவு தெரியுமா?

கேப் முன்பதிவு

கேப் முன்பதிவு

பெங்களூரை சேர்ந்த 34 வயது பெண் நாஜியா நாயக் என்பவர் தனது உறவினர்களை பார்ப்பதற்காக ஆன்லைனில் வாடகை வண்டியை முன்பதிவு செய்தார். அதன் பின் சில நிமிடங்கள் கழித்து அவர் அந்த பயணத்தை ரத்து செய்தார்.

கேன்சல் கட்டணம்

கேன்சல் கட்டணம்

இதனை அடுத்து அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய வாகன ஓட்டுனர் கேன்சல் செய்த பயணத்திற்கான கட்டணத்தை செலுத்துமாறு கூறினார். மேலும் அவரே வாடிக்கையாளர் சேவை மையம் குறித்த தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு அதில் தொடர்புகொண்டு நிர்வாகியிடம் கேன்சல் கட்டணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார்.

கஸ்டமர் கேர் நிர்வாகி
 

கஸ்டமர் கேர் நிர்வாகி

இதனையடுத்து அவர் ஓட்டுனர் கொடுத்த குறிப்பிட்ட எண்ணில் நிர்வாகியை அழைத்தார். அந்த எண்ணில் பேசிய கஸ்டமர் கேர் நிர்வாகி அவருக்கு உதவ முன்வந்தார். அவர் நாஜியாவின் கம்ப்யூட்டரை தனது கம்ப்யூட்டரில் இன்டர்நெட் மூலம் இணைக்க Anydesk அனுமதி கேட்டார்.

டெபிட் கார்டு ஸ்கேன்

டெபிட் கார்டு ஸ்கேன்

இதனையடுத்து டெபிட் கார்டை ஸ்கேன் செய்வதற்கான இணைப்பையும் அந்த நபருக்கு நாஜியா அனுப்பினார். இந்த நிலையில் டெபிட் கார்டு ஸ்கேன் செய்யப்பட்டவுடன் கேன்சல் கட்டணத்தை செலுத்துவதற்காக நாஜியா முற்படும்போது திடீரென அவரது வங்கி கணக்கில் இருந்து ₹94,367 கழிந்தது.

மோசடி

மோசடி

இதனால் அதிர்ச்சி அடைந்த நாஜியா மீண்டும் அந்த எண்ணுக்கு அழைக்க முயன்றபோது பதில் இல்லை. இதனை அடுத்து அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

என்ன செய்ய கூடாது?

என்ன செய்ய கூடாது?

இது போன்ற சைபர் மோசடிகளை தடுப்பதற்கு என்னென்ன செய்யக்கூடாது என்பதை தற்போது பார்போம்.

1. உங்கள் வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

2. உங்களின் கடவுச்சொற்களையோ அல்லது அதுபோன்ற முக்கியமான தரவுகளையோ யாருடனும் பகிர வேண்டாம்.

3. உங்களுக்குத் தெரியாத/நம்பிக்கை இல்லாத எவருடனும் AnyDesk பயன்பாட்டைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.

4. ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bengaluru woman tries to pay cancellation charges for cab ride, loses ₹94,367

Bengaluru woman tries to pay cancellation charges for cab ride, loses ₹94,367 | கேப் முன்பதிவை கேன்சன் செய்த பெண்மணி.. ₹94,367 இழந்த பரிதாபம்!

Story first published: Monday, September 5, 2022, 14:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.