கோவில் அழகா நீ அழகா தெரியவில்லை கண்ணே..ரம்யா பாண்டியனை பார்த்து மயங்கிப்போன ரசிகர்கள்!

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் மம்முட்டிக்கு ஜோடியாக நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். என்னத்தான் படங்களில் நடித்தாலும் தன்னை வளர்ந்து விட்ட ரசிகர்களை மறக்காமல் தினமும் போட்டோவை ஷேர் செய்து வருகிறார்.

நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடித்த ஜோக்கர் திரைப்படம் தேசியவிருதை வென்றது.

பின்னர் தாமிரா இயக்கிய ஆண் தேவதை படத்தில் சமுத்திரகனியின் மனைவியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் நடித்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படமாக இருந்தாலும், இவருக்கு படவாய்ப்பு வரவில்லை. பட வாய்ப்பு கிடைக்காததால் நொந்து போன ரம்யா,சேலையில் தனது இடையில் இருக்கும் வளைவு நெளிவுகளை போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு இருந்தார்.

இடையழகி

இடையழகி

இந்த மொட்டை மாடி போட்டோஷூட் ஓவர் நைட்டில் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அன்று முதல் இடையழகி ரம்யா பாண்டியன் என்றும், இன்ஸ்டா க்யூன் என்றும் ரம்யா பாண்டியனின் தீவிர ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர். போட்டோஷூட் மூலம் கிடைத்த புகழலால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாக்ஸில்

பிக் பாக்ஸில்

இதையடுத்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் பைனல் வரை சென்ற அவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டில் நுழைந்தார். அதிலும் வெற்றி பெறவில்லை.

மலையாளபடத்தில்

மலையாளபடத்தில்

தற்போது கணிசமான படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் மலையாளத்தில், நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறிர். தமிழ் ரசிகர் பட்டாளம் ஏராளம் கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது முதல் முறையாக வேறுமொழி படத்தில் கமிட்டாகி உள்ளார்.

கோவில் அழகா நீ அழகா

கோவில் அழகா நீ அழகா

தன்னை வாழவைத்த தெய்வங்களை மறக்காத ரம்யா பாண்டியன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து தன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், அதற்கு பிரம்மிப்பின் பிரம்மாண்டம் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கோவில் அழகா நீ அழகா தெரியவில்லை கண்ணே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.