”சாமி சாமி” பாட்டுக்கு க்யூட்டாக டான்ஸ் ஆடிய பேபி… இப்போ ராஷ்மிகா மந்தனாவோட ஆசை இதுதான்!

ஐதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

‘புஷ்பா’ படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், புஷ்பா படத்தின் ‘சாமி சாமி’ பாடலுக்கு பள்ளிச் சிறுமி நடனமாட, அதற்கு ராஷ்மிகா மந்தனா ரியாக்ட் செய்துள்ளார்.

பான் இந்தியாவை அலறவிட்ட புஷ்பா

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கிய ‘புஷ்பா’ திரைப்படம், கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா, தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து ஏரியாக்களிலும் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்தது. மேக்கிங், ஆக்சன், மியூசிக், சினிமோட்டோகிராபி, எடிட்டிங் என டெக்னிக்கலாகவும் புஷ்பா படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. குறிப்பாக தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்து பட்டையைக் கிளப்பின.

சாமியாட வைத்த சாமி சாமி பாடல்

சாமியாட வைத்த சாமி சாமி பாடல்

புஷ்பா படத்தில் வரும் ‘சாமி சாமி’ பாடலில் ராஷ்மிகா மந்தனா லவ்லியாக டான்ஸ் ஆடி கலக்கியிருப்பார். அந்தப் பாடலின் ட்யூன், மெட்டு, பாடல் வரிகள், குரல், லொக்கேஷன் எல்லாமே பக்காவாக இருந்தன. நெத்தியில் கையை வைத்துக் கொண்டு இடுப்பை அலுக்கிகுலுக்கி ராஷ்மிகா ஆடிய டான்ஸ், திரையரங்குகளைக் கடந்து இன்ஸ்டா போன்ற ரீல்ஸ்களிலும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், இந்தப் பாடலுக்கு பள்ளிச் சிறுமி ஒருவர் செம்ம க்யூட்டாக டான்ஸ் ஆடி ரசிக்க வைத்துள்ளார்.

சிறுமியை பார்க்க வேண்டும்: ராஷ்மிகா ட்வீட்

சிறுமியை பார்க்க வேண்டும்: ராஷ்மிகா ட்வீட்

ஸ்கூல் யூனிஃபார்மில் பல குழந்தைகளுக்கு நடுவே சாமி சாமி பாடலுக்கு க்யூட்டாக டான்ஸ் ஆடிய சிறுமியின் வீடியோ, சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் ஜூனியர் ராஷ்மிகா என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், ராஷ்மிகாவின் நடனத்தையும் சிறுமியின் டான்ஸையும் ஒப்பிட்டும் கமெண்ட்ஸ் செய்கின்றனர் இந்நிலையில், சிறுமி டான்ஸ் ஆடும் வீடியோவை தனது டிவீட்டரில் ஷேர் செய்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

க்யூட் டன்ஸ்க்கு சிறப்பான கேப்ஷன்

க்யூட் டன்ஸ்க்கு சிறப்பான கேப்ஷன்

சாமி சாமி பாடலுக்கு சிறுமி டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருவதை அடுத்து, ராஷ்மிகா ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். சிறுமியின் டான்ஸால் உற்சாகமானதாகவும், அவரை சந்திக்க ஆசையாக உள்ளது. ரசிகர்கள் அந்த சிறுமி எங்கிருக்கார் என என,க்கு தெரியப்படுத்தவும் என வேண்டுகோள் விடுத்துள்:ளார். ராஷ்மிகா மந்தனாவின் இந்த ட்வீட்,டை ரசிகர்களும் அதிகமாக ஷேர் செய்து, அந்த சிறுமியை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.