குழந்தைகளை பாதிக்கும் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல்.. சென்னையில் நிரம்பும் மருத்துவமனைகள்!

தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென பரவும் இந்த மர்ம காய்ச்சல் குறித்து குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமாரிடம் பேசினோம். அப்போது, “ப்ளூ காய்ச்சல் H1 N1 என்ற வைரஸால் பரவி வருவதாக கூறினார். இதனால் உடல் வலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாக்கும் என்றார்.

இந்த காய்ச்சல் சீதோஸ்ன பிரச்சனை காரணமாக பரவும் இந்த காய்ச்சல் பிறரிடம் இருந்து பரவும் தன்மை கொண்டது என்றும் கொரோனாவுக்கு கடைப்பிடித்ததை போன்று மாஸ்க், தனிமனித இடைவெளி உள்ளிட்டவைகளை கடைப்பிடித்தால் பரவலை தடுக்கலாம் என்று கூறினார்.

லேசானா அறிகுறி உள்ளபோதே மருத்துவரை அணுகி பாராசிட்டமால், ஆண்டி கோல்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கிய மருத்துவர், கொரோனா வைரஸை போன்று சுவையின்மை பிரச்சனை இந்த ஃப்ளூ வைரஸால் இருக்காது என்று தெரிவித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தடுப்பு நடவடிக்கையாக சத்துள்ள உணவு பொருட்கள், வெந்நீர், பழங்கள் என நல்ல உணவுகளை எடுத்துக்கொள்வதோடு யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டால் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்” என்று மருத்துவர் அருண்குமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.