50 வயதிலும் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ராஜமாதா.. ஜெயிலர் ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சென்னை:
இயக்குநர்
நெல்சன்
இயக்கத்தில்
ரஜினிகாந்தின்
நடிப்பில்
உருவாகி
வரும்
ஜெயிலர்
படத்தில்
முக்கிய
கதாபாத்திரத்தில்
நடித்து
வரும்
ரம்யா
கிருஷ்ணனின்
லேட்டஸ்ட்
போட்டோஷூட்
புகைப்படங்கள்
வெளியாகி
உள்ளன.

#RamyaKrishnan
என்கிற
ஹாஷ்டேக்கையே
பதிவிட்டு
ரசிகர்கள்
இந்தியளவில்
டிரெண்ட்
செய்து
வருகின்றனர்.

50
வயதை
கடந்த
நிலையில்,
அழகும்,
ஸ்டைலும்
அப்படியே
மாறாமல்
இளம்
நடிகைகளுக்கே
டஃப்
போட்டி
கொடுத்து
வருகிறார்
இந்த
ராஜமாதா
சிவகாமி
தேவி.

அம்மன்
கதாபாத்திரங்களில்

செளந்தர்யா
நடிப்பில்
தெலுங்கு
மற்றும்
தமிழில்
வெளியான
அம்மன்
படத்தில்
அம்மனாக
நடித்து
அனைவரையும்
ஆச்சர்யப்பட
வைத்தவர்
நடிகை
ரம்யா
கிருஷ்ணன்.
அதன்
பிறகு
ராஜகாளியம்மன்,
நாகேஸ்வரி,
ஸ்ரீராஜ
ராஜேஸ்வரி
உள்ளிட்ட
படங்கள்
ரம்யா
கிருஷ்ணனுக்காகவே
தயாரிக்கப்ப்பட்டன.

நீலம்பரி ரிட்டர்ன்ஸ்

நீலம்பரி
ரிட்டர்ன்ஸ்

அம்மன்
கதாபாத்திரங்களில்
பெயர்
பெற்று
வந்த
ரம்யா
கிருஷ்ணன்
கே.எஸ்.
ரவிகுமார்
இயக்கத்தில்
ரஜினிகாந்த்
நடித்த
படையப்பா
படத்தில்
நீலம்பரி
கதாபாத்திரத்தில்
வில்லியாக
நடித்து
மிரட்டி
மிகப்பெரிய
அளவில்
ரசிகர்கள்
மத்தியில்
இடம்பிடித்தார்.
பாபா
படத்திலும்,
நீலாம்பரியாக
ஒரு
காட்சியில்
நடித்திருந்த
ரம்யா
கிருஷ்ணன்
பல
ஆண்டுகளுக்கு
பிறகு
மீண்டும்
ஜெயிலர்
படத்தில்
ரஜினியுடன்
இணைந்து
நடித்து
வருகிறார்.

ராஜமாதா

ராஜமாதா

நீலம்பரி
கதாபாத்திரம்
ரம்யா
கிருஷ்ணனுக்கு
இந்தியளவில்
புகழைத்
தேடி
தந்தது
என்று
சொன்னால்,
பாகுபலி
படத்தில்
அவர்
நடித்த
சிவகாமி
தேவி
கதாபாத்திரம்
ராஜாமாதாவாக
அவருக்கு
உலகளவில்
புகழைத்
தேடித்
தந்தது.
சினிமாவில்
எந்தளவுக்கு
பிசியாக
இருக்கிறாரோ
அதே
அளவுக்கு
சின்னத்திரை
ரியாலிட்டி
ஷோக்களிலும்
நடுவராக
பங்கேற்று
மாஸ்
காட்டி
வருகிறார்.
பிக்
பாஸ்
ஜோடிகள்
நிகழ்ச்சியில்
நடுவராக
இருந்து
வரும்
ரம்யா
கிருஷ்ணன்,
கமலுக்கு
பதிலாக
ஒரு
பிக்
பாஸ்
எபிசோடையும்
தொகுத்து
வழங்கி
இருந்தது
குறிப்பிடத்தக்கது.

ஃபேஷனில் ஆர்வம்

ஃபேஷனில்
ஆர்வம்

நடிப்பை
தாண்டி
51
வயதாகும்
நடிகை
ரம்யா
கிருஷ்ணன்
இப்பவும்
ஃபேஷனில்
அதிக
ஆர்வம்
செலுத்தி
வருகிறார்.
இந்நிலையில்,
அவர்
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
சமீபத்தில்
எடுத்த
போட்டோஷூட்
புகைப்படங்களை
பதிவிட்டு
ரசிகர்களுக்கு
இன்பதிர்ச்சி
கொடுத்துள்ளார்.
பிங்க்
நிற
சேலையில்
பக்காவாக
போஸ்
கொடுத்து
ரசிகர்களை
கிறங்கடித்துள்ளார்
ரம்யா
கிருஷ்ணன்.

டிரெண்டிங்கில் ரம்யா கிருஷ்ணன்

டிரெண்டிங்கில்
ரம்யா
கிருஷ்ணன்

தமிழ்,
தெலுங்கு,
இந்தி,
மலையாளம்,
கன்னடம்
உள்ளிட்ட
மொழிகளில்
260க்கும்
மேற்பட்ட
படங்களில்
நடித்த
ரம்யா
கிருஷ்ணன்
தற்போது
போட்டோக்களை
வெளியிட்ட
நிலையில்,
#RamyaKrishnan
ஹாஷ்டேக்கை
போட்டு
அவரது
ரசிகர்கள்
டிரெண்ட்
செய்து
வருகின்றனர்.
கடைசியாக
விஜய்
தேவரகொண்டாவின்
லைகர்
படத்தில்
அம்மாவாக
நடித்து
அசத்தி
இருந்தார்
ரம்யா
கிருஷ்ணன்
என்பது
குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.