அதிமுக கவுன்சிலர் கட்டிய தண்ணீர் தொட்டி இடிந்து மூதாட்டி பலி

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், நாரைக்கிணறு ஊராட்சி பெரியகிணறு 5வது வார்டு அதிமுக உறுப்பினர் ரம்யா. இவரது கணவர் முருகன். நாரைக்கிணற்றிலிருந்து ஒன்பதாம்பாலிகாடு செல்லும் மெயின்ரோட்டில், பொதுமக்கள் துணி துவைக்க பயன்படுத்துவதற்காக, சொந்த செலவில் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளார். 6 அடி அகலத்தில், 8 அடி உயரம் கொண்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.  கான்கிரீட் காயாத நிலையில், தொட்டியில்  தண்ணீர் நிரப்பி, குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி(58) என்பவர், தண்ணீர் பிடிப்பதற்காக தொட்டிக்கு வந்துள்ளார். அப்போது தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டி இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரிக் கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.