மெக்சிகோவில் நிலநடுக்கம்| Dinamalar

மெக்சிகோ சிட்டி:மெக்சிகோவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், நேற்று முன்தினம் இரண்டு பேர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன.
வட அமெரிக்க நாடானா மெக்சிகோவில், மூன்று நாட்களுக்கு முன்பு தான், மிச்சோகன் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதேபோல், நேற்று அதிகாலை ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்திலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கம், மாகாணம் முழுதும் உணரப்பட்டது. இது, மூன்று நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின் அதிர்வாகும். இந்நாட்டில், ௧௯௮௫ செப்., ௧௯ம் தேதி நிகழ்ந்த மிகப்பயங்கரமான நிலநடுக்கத்தில், ௯,௫௦௦ பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.