புதுடில்லி,:தேசிய பங்கு சந்தையின் கணினிகளை கட்டுப்படுத்தும் ‘சர்வர்’களில் இருந்து, முறைகேடாக தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில், முன்னாள் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டில்லி உயர் நீதிமன்றம், ‘ஜாமின்’ வழங்கியது.என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, 2013 – 16 காலகட்டத்தில் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார்.
அப்போது, ‘கோ – லொகேஷன்’ எனப்படும், பங்கு சந்தையின் அனைத்து கணினிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வர் மையத்தை இயக்கும் அதிகாரம், தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதை பயன்படுத்தி, பங்கு சந்தையில் பங்கு விலையில் ஏற்பட உள்ள மாற்றத்தை முன்னரே அறிந்து மோசடிகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் மற்றொரு அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில், சித்ரா மற்றும் ஆனந்த் கைது செய்யப்பட்டனர். இருவரும் டில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் ஜாமின் வழங்கி நீதிபதி சுதிர் குமார் ஜெயின் நேற்று உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement