யப்பா மணிக்கு 240 கி.மீ. வேகம்… கியூபா, புளோரிடாவை புரட்டிப் போட்ட இவான் புயல்!

சில தினங்களுக்கு முன் கரீபியன் கடலில் உருவான இவான் புயல் கியூபா நாட்டின் மேற்கு பகுதியை இன்று அதிகாலை தாக்கியது. மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடந்ததால் அந்த பகுதிகளில் பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசியது. புயல் தாக்கியதில் கியூபாவின் மேற்கு பகுதி கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், நாடு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அண்டை நாடு என்பதால் கியூபாவில் உருவான புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் விட்டு வைக்கவில்லை. புளோரிடாவின் தென்மேற்கு கடலோர பததியை மையமாக கொண்டு தாக்கிய புயல் கரையை கடந்தபோது மணிக்கு 240 -170 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. கனமழை காரணமாக குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

இவான் புயலால் புளோரிடாவின் தென்மேற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. பலலாயிரகணக்கான வீடுகளி்ல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சகணக்கானோர் இருளில் தவித்து வருதாகவும், இதேபோன்று தென் கரோலினா, ஜார்ஜியாவிலும் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலுக்கடியில் வெடித்த எரிமலை – பசிபிக் பெருங்கடலில் உருவான தீவு!

இதனிடையே, கியூபாவில் இருந்து புளோரிடா நோககி வந்த அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் மாயாகினர். அவர்களின் நிலை என்னவானதென்று தெரியாததால் உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.