திமுக ஆட்சி குறித்து புத்தகம் எழுதலாம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தேசதந்தை மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள்வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுநாளும் இன்று அனுசரிக்கப்படுகிறடு. எனவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர். அந்தவகையில், அதிமுக சார்பில் மகாத்மா கந்தியின் பிறந்தநாள் மற்றும்  காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைய்டுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதிமுக சார்பில் காமராஜருக்கு புகழ் மாலை சூட்டப்பட்டது. கிங் மேக்கராக காமராஜ் செயல்பட்டார். இந்திய அரசியலில் பல தலைவர்களை உருவாக்கியவர். விடியாத திமுக அரசு ஏற்கனவே குழப்பத்தில் உச்சியில் உள்ளது.

 

ஆட்சி செய்யவும் தெரியவில்லை அமைச்சர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் அமைச்சர்களின் அலப்பறைகள் என்று ஒரு புத்தகமே எழுதலாம். ஆட்சியாளர்களுடன் அதிகாரிகளும் குழம்பிவிட்டனர். பொதுச்செயலாளர் தேர்தலை திசை திருப்பிவிட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை குழப்பிவிட்டார். அவர் தரப்பு வாதம் மட்டும்தான் கூறுகிறார். ஒரு மோசடியான பித்தலாட்ட அரசியலில் பன்னீர்செல்வம் ஈடுபட்டிருக்கிறார். நல்ல ரத்தம் ஓடும் அண்ணா திமுக தொண்டர்கள் ஒருபோதும் சசிகலாவுடன் சேரமாட்டார்கள்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.