முதியோர்களுக்கு படகு சவாரி: நோணாங்குப்பத்தில் உற்சாகம்| Dinamalar

உலக முதியோர் தினத்தையொட்டி, முதியோர்கள் படகு சாவரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

உலக முதியோர் தினத்தையொட்டி, ஹெல்ப் ஏஜ் இந்தியா, முதியோர் உதவி எண் – 14567 அமைப்பு, ஈட்டன் நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் இயங்கி வரும் முதியோர் இல்லங்களில் உள்ள 150 முதியவர்கள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியின்போது முதியவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சுற்றுலா நிகழ்ச்சிக்கு தாமரைக்குளம், முதியோர் கிராமம் துணைதிட்ட இயக்குனர் சத்தியபாபு வரவேற்றார். ஹெல்ப்பேஜ் இந்தியா தலைவர் வேணுகோபால் ராமலிங்கம் உலக முதியோர் தினம் குறித்து பேசினார்.சிறப்பு விருந்தினரான சமூக நலத்துறை செயலர் உதயகுமார், இயக்குநர் பத்மாவதி, ஈடன் நிறுவன நிர்வாக இயக்குனர் சையது சஜ்ஜத் அலி, புதுச்சேரி நகர அமைப்பு குழுமம் மூத்த அமைப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதியோர் உதவி எண் 14567 திட்ட மேலாளர் கவுதம் யஷ்பால் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.